தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க தமிழக மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்!

ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.யை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் தடுத்து- துரத்திவிட்டு - டில்லியில் இருந்தும் அகற்றவேண்டும்!

சேலம் - தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல்காந்தி சூளுரை!

சேலம், மார்ச் 30- தி.மு.. தலைவர் மு..ஸ்டாலினை முதல மைச்சராக்க மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். அந்த முடிவை ஒப்புக்கொள்கிற விதமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் போர் இத்துடன் முடி வதில்லை. ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யை தமிழ்நாட்டில் நுழைய முடியாமல் தடுத்து விட்டால் மீண்டும் நுழைய மாட்டார்கள் என்பது கிடையாது. மீண்டும் மீண்டும் முயற் சிப்பார்கள். முதலில் தமிழ்நாட்டில் இருந்து துரத்தி விட்டு, டில்லியில் இருந்தும் அகற்ற வேண்டும் என்றார் காங்கிரஸ் இயக்கத்தின் இளம்தலைவர் ராகுல் காந்தி அவர்கள்.

சேலத்தில் 28.3.2021 அன்று நடைபெற்ற தேர்தல் பிரச் சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றுகையில், இன்றைய .தி.மு.. அணிந் திருக்கும் முகமூடிக்குள் மறைந்திருக்கும் பா... - ஆர்.எஸ்.எஸ். அணிகளைத் தோற்கடிப்பீர் என வேண்டுகோள் விடுத்தார்.

இக்கூட்டத்தில் ராகுல்காந்தி அவர்கள் பேசியதாவது:

இங்கு பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். காலையில் நான் பேசியபோது, இது இரண்டு கட்சிகளுக்கு இடையிலான போர் இல்லை. நிறைய தேர்தல்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் இந்த தேர்தல் இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போட்டியில்லை.

ஒற்றைச் சிந்தனையை ஒருபோதும் ஏற்க முடியாது!

தமிழ் கலாசாரம், தமிழ் மொழி, தமிழ் வரலாற்றின் மீது முழுமையான தாக்குதலை சந்தித்து வருகிறோம். ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தின் நிலைப்பாடு இந்தியா முழுவதற்குமானது. எந்த ஒரு உறவும் சமநிலையிலே இருக்க வேண்டும். அன்பும் மரியாதையும் ஒரு வருக்கு ஒருவர் செலுத்த வேண்டும். இந்தியா என்பது பல்வேறு மாநிலங்களின் ஒருங்கிணைப்பு. மொழி, கலாச்சாரம், பண்பாடுகள், மதங்களின் ஒருங்கிணைப்பாக இந்தியா உள்ளது. எந்த ஒரு சிந்தனையும், ஒன்றைவிட மற் றொன்று பெரியது என்று சொல்லிவிட முடியாது. நாட்டிற்கு நாம் அனைவரும் அனைத்து மொழியும், அனைத்து கலாசாரமும் சமமானது.

தமிழ் மொழியின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. ஒட்டு மொத்த இந்தியா மீதான தாக்குதலாக உள்ளது. தமிழர்களை மதிக்காமல் இந்தியா இருந்து விட முடியாது. மேற்கு வங்காளத்தை மதிக்காமல் இருக்க முடியாது. ஒற்றைச் சிந்தனைக்கு இந்தியாவை தள்ள முடியாது. அனைத்து மொழிகளும், கலாச்சாரங்களும், சித்தாந்தங்களும் இந்தி யாவை உருவாக்கி உள்ளன. ஒற்றைச் சிந்தனையை ஒத்துக் கொள்ள முடியாது என்பதால் தான் இங்கு வந்துள்ளேன்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சொன்னதுபோல...

நாங்கள் அனைவரும் 'தமிழ்' என்ற சிந்தனை யையும் ஆதரிக்கும் நேரத்தில் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து சிந்தனையையும் ஆதரிக்கிறோம். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் சொன் னதுபோல, முகக்கவசம் அணிவது கரோனாவிற்கு எதிராக மிகவும் பாதுகாப்பானது. முகக்கவசம் அணிவதை எங்குப் பார்த்தாலும் பார்க்கிறோம். முகக்கவசத்திற்கு பின்னே சிலவற்றை மறைத்து கொள்கிறோம். ஒருவரை பார்த்து சிரிப்பது கூட தெரியாத நிலை உள்ளது. இது பழைய .தி.மு.. என்று நம்பி யாரும் ஏமாந்து விடக்கூடாது. தற்போது .தி.மு.. போன்ற தோற்றத்தில் முகக்கவசம் அணிந்து கொண்டுள்ளது. அந்த முகக்கவசத்தின் பின்னே ஆர்.எஸ்.எஸ். பிஜேபி ஒளிந்து கொண்டுள்ளது.

பழைய .தி.மு.. என்பது போய்விட்டது. முடிந்து விட்டது. தற்போது, ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யால் இயக்கப்படும் கட்சியாக .தி.மு.. உள்ளது. தமிழக மக்கள் இதனை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஏன் இந்த முகமூடி என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தலை குனிந்து நிற்கும் முதலமைச்சர்!

ஒரு தமிழர் கூட மோடி, அமித்ஷா ஆகியோரிடம் தலை குனிந்து நிற்க விரும்பவில்லை. மோடி, அமித்ஷா,மோகன் பகவத் பேச்சைக் கேட்க விரும்பவில்லை. ஆனால், ஏன் இந்த முதலமைச்சர் அவர்களின் காலில் விழ நிற்கிறார். ஒரு தமிழரும் காலில் விழும் கலாச்சாரத்தை விரும்பவில்லை. இது நம்முடைய கலாச்சாரத்திற்கு எதிரானது. தமிழக முதலமைச்சர் பிரதமர் மோடியின் முன்பு தலைகுனிந்து, வணங்கி நிற்கிறார். ஏன் என்றால், மத்திய அரசின் புலனாய்வுத்துறை, பொருளாதாரக் குற்றத்துறை கையில் இருப்பதால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தலைகுனிந்து நிற்கிறார். அவருக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை.

முதலமைச்சர் தலைகுனிந்து நிற்பதற்கான விலையை கொடுக்கப்போகிறார். ஒவ்வொரு முறையும் அவர் தலைகுனிந்து நிற்கும்போது, அதற்கான விலையை அவர் கொடுக்கவில்லை. தமிழர்கள் மிகப்பெரிய விலையை இதற்காக கொடுக்கிறார்கள். தமிழ்மொழி, கலாச்சாரம் மற்றும் விருப்பமான பண்பாடு, பழக்க வழக்கங்களை விலையாக கொடுத்து வருகிறார்கள். தமிழ்ப் பண்பாட்டினையும், மொழியை காப்பாற்றும் பொறுப்பில் இருப்பவர் கவலைப்பட வில்லை.

இலட்சக்கணக்கானோர் வேலையிழப்பு!

முதலமைச்சருக்கோ சிறிதும் கவலையில்லை!

நாட்டின் உற்பத்தித் தலைநகராக தமிழ்நாடு இருக் கிறது. சிறு குறு தொழிற்சாலைகள் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொருட்களை அனுப்புகிறது. நோயாளி மருத்துவமனைக்குச் செல்வதற்கான ஆம் புலன்சுகளைக் கட்டமைக்க தமிழகம் தயாரிக்கிறது. பண மதிப்பிழப்பும், ஜி.எஸ்.டி வரியும் இரட்டைத் தாக்குத லாக தொழில்துறையினருக்கு ஏற்படுத்தி விட்டது. லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து பரிதவிக் கும் நிலையில், இதைப்பற்றி முதலமைச்சர் கேள்வி கேட்க வில்லை.

மூன்று வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிராகவும் முதலமைச்சர் கேள்வி கேட்கவில்லை. தமிழக விவசாயி களுக்காகவும், கேட்கவில்லை. இந்திய விவசாயிகளுக் காகவும் கேட்கவில்லை. திட்டமிட்டு தமிழர்களின் வாழ்வி யலை குலைக்கும் கல்விக் கொள்கை கொண்டுவரப் பட்டுள்ளது. நீட் தேர்விற்கு எதுவும் குரல் எழுப்பவில்லை . மத்திய அரசு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற வெற்றுக் காசோலையை முதலமைச்சர் வழங்கி விட்டார். நாட்டை பிளவுபடுத்தும் மத்திய அரசின் செயலை தட்டிக் கேட்பதில்லை.

உங்களுடைய பண்பாடும், வரலாறும் உங்களுக்கு இணையாக யாரும் இருக்க முடியாது என்பதை என்னால் உணர முடிகிறது. உங்கள் நம்பிக்கைகளை நான் மதிக்கிறேன். எந்தவித சந்தேகமுமின்றி உங்களை நம்புகிறேன். உங்கள் பண்பாட்டின் மீதான தாக்குதலை நீங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்.

ஸ்டாலினை முதலமைச்சராக்க மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். அந்த முடிவை ஒப்புக்கொள்கிற விதமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் போர் இத்துடன் முடிவதில்லை. ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யும் தமிழ்நாட்டில் நுழைய முடியாமல் தடுத்து விட்டால் மீண்டும் நுழைய மாட்டார்கள் என்பது கிடையாது. மீண்டும் மீண்டும் முயற்சிப்பார்கள்.

பணம் சம்பாதிப்பதற்காக தமிழ்ப் பண்பாட்டையே விற்கும் அவலநிலை!

முதலில் தமிழ்நாட்டில் இருந்து துரத்தி விட்டு, டில்லி யில் இருந்தும் அகற்ற வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் இதுபோன்ற பாதிப்பில் அகப்பட்டுத் தவிக்கிறது. ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகிறது. அமைப்புகள் அழிக்கப்படுகிறது. தங்களுடைய நண்பர்களுக்கு உதவி செய்வதற்காக இதைப் போல செய்கிறார்கள். சிலருக்கு பணம் சேர்வதற்காக, நம்முடைய பண்பாட்டினை விலை கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு போராட் டங்களிலும் அவர்கள் நிச்சயம் வெல்ல முடியாது.

தமிழக மக்கள் மிகவும் எளிமையானவர்கள். என்னுடைய பாட்டி காலம் தொடங்கி தமிழக மக்கள் எங்கள் மீது தொடர்ந்து அன்பையும், அக்கறையையும் செலுத்தி வருகிறார்கள். குறைந்தபட்ச மரியாதையை நாங்கள் காட்டினால், அவர்கள் அதிகபட்சமாக திருப்பி காட்டுகிறார்கள்.

தமிழர்களின் மனதில் இடம் பிடிக்க மரியாதையும் அன்பும் மட்டுமே போதுமானது. இதை ஆர்.எஸ்.எஸ்.சும் மோடியும் உணர முடியவில்லை. அன்பும், பாசத்தையும் தவிர தமிழர்களை எதுவும் கட்டுப்படுத்தாது. இந்தத் தேர்தலுக்குப் பிறகு அவர்களுக்குப் புரிய வைப்போம்.

இவ்வாறு ராகுல் காந்தி உரையாற்றினார்.


Comments