‘அஸ்தம' காலத்தில் ஆட்டமா?

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் .தி.மு.. அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார்.

ஊத்துப்பட்டி பகுதியில் அமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். தேர்தல் பறக்கும் படையினர் அதிகாரி மாரிமுத்து தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவற்றுள் அமைச்சரின் வாகனமும் அடங்கும்.

அவ்வளவுதான், ஆத்திரத்தின் உச்சிக்கே சென் றார் அமைச்சர். ‘‘இன்னும் பத்து நாட்கள்தான் ஆடு வீர்கள்; அதற்குப் பிறகு, உன்னை என்ன செய்கிறேன் பார்!'' என்று மிரட்டியுள்ளார்.

அதிகாரி மாரிமுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். நடவடிக்கை ஏதுமில்லை. அதோடு நின்றாலும் பரவாயில்லை; அதிகாரி மாரிமுத்து கோவில்பட்டியிலிருந்து விளாத்திகுளத்துக்குப் பந்தாடப்பட்டுள்ளார்.

இதனால் அதிகாரிகள் மத்தியிலே பிரச்சினை ஏற்பட, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, அதிகாரி மாரிமுத்துவை மீண்டும் கோவில்பட்டிக்கே மாற்ற உத்தரவிட்டது மட்டுமன்றி, அதிகாரியைத் திட்டி, அச் சுறுத்திய அமைச்சர்மீது 353, 501 ஆகிய பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்கொன்றையும் பதிவு செய்துள்ளது.

''ஆடும் ஆட்டம்'' இன்னும் எத்தனை நாளைக்கோ!

Comments