தமிழக பாஜகவின் லட்சணம் இதுதான்!

சென்னை, மார்ச் 13 வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பே கட்சியின் பெயர் குறிப்பிட்டு தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுதாக்கல் செய்து டில்லி தலைமைக்கே திகிலூட்டியுள்ளார் நயினார் நாகேந்திரன்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக தனது 177 வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்ட நிலையில், பாஜக இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. வேட்பாளர்களை தேர்வு செய்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அதற்கு ஒப்புதல் பெறுவதற்காக டில்லிக்கு சென்றிருக்கிறார். இன்று (13.3.2021) மாலை வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது

பாஜகவில் இன்னும் வேட்பாளர் பட்டியலே அறிவிக்கப் படாத சூழலில், தமிழக பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. "நல்ல நேரத்தை" மனதில் வைத்துக் கொண்டு தான் வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே வேட்பு மனு தாக்கல் செய்ததாக அவர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

ஒரு கட்சி சார்பில் போட்டியிடவேண்டுமென்றால் அதன் 'பி' படிவம் அந்தக் கட்சியின் லெட்டர் கெட் கடிதம் மற்றும் அக்கட்சித் தலைவரின் ஒப்பம் அனைத்தும் இருக்கவேண்டும், ஆனால் இவர் வெறும் காகிததில் நான் பாஜக கட்சி சார்பில் போட்டியிடுகிறேன் என்று 'நோட்டரி' வாங்கி தேர்தல் அலுவலரிடம் கொடுத்துள்ளார். இதனால் அவரது வேட்பு மனு செல்லாததாகிவிடும் என்று தேர்தல் கணிப்பாளர்கள் கூறியுள் ளனர். தமிழக அரசின் வருவாய்த்துறை அமைச்சராகவும் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த நயினார் நாகேந்திரனுக்கு இந்த விபரம் கூட தெரியாமல் வேட்பு மனு தாக்கல் செய்ததால் டில்லி தலைமை அதிர்ச்சியில் ஆழ்ந் துள்ளது.

 காவல்துறை பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் சிறப்பு டிஜிபியை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்?

 உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை, மார்ச் 13 பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அம்பான எஸ்.பி.யை பணியிடை நீக்கம் செய்துவிட்டு, அவரை எய்த வில்லான சிறப்பு டிஜிபியை ஏன் இதுவரை பணியிடை நீக்கம் செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கை சிபிசிஅய்டி விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில், அய்பிஎஸ் அதிகாரிகள் சம்பந்தப் பட்டுள்ளதால், வழக்கை சிபிஅய்க்கு மாற்றக் கோரி, சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி.யான கே.ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு  தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத் துள்ளது. இந்த விசாரணையை உயர் நீதிமன்றம் கண் காணிக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கையும் விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதன் படி, நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசார ணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கை நியாயமாக விசாரித்து தீர்த்து வைக்க வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது.  பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். டிஜிபியால் ஏவப்பட்ட அம்பான எஸ்.பியை தான் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். ஆனால், அவரை எய்த வில்லான டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்படாதது ஏன், அவர் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம் காட்டப்படுகிறது. அவர் சக்தி வாய்ந்தவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டப்படுகிறதா? இந்த வழக்கில் மக்கள் நீதிமன்றம்மீது நம்பிக்கை வைத்துள் ளனர். எனவே, வழக்கை நேர்மையாக நடத்த வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது. 10க்கும் மேற்பட்ட பெண் அய்பிஎஸ் அதிகாரிகள், சட்டம் ஒழுங்கு டிஜிபியை சந்தித்து, சிறப்பு டிஜிபியை பதவி விலகச் செய்யுமாறுகோரி கடிதம் கொடுத்துள்ளனர். இருந்தும் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, சிறப்பு டிஜிபி மீதான விசாரணை அறிக்கையை மார்ச் 16இல்  சிபிசிஅய்டி தாக்கல் செய்ய வேண்டும் என்றார். அப்போது சிறப்பு டிஜிபி சார்பில் ஆஜரான வழக்குரைஞர், விசாகா குழுவில் உள்ள ஒருவர் எவ்வித விசாரணையும் இல்லாமல் தன்னை தூக்கிலிட வேண்டுமென வாட்ஸ் அப்பில் விமர்சிக்கிறார் என்று வாதிட் டார். இதையடுத்து விசாரணையை நீதிபதி வரும் 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

 மே 1ஆம் தேதிக்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசிஅதிபர் ஜோ பைடன் உறுதி

வாஷிங்டன், மார்ச் 13 அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று 50 நாள் ஆட்சியை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி, நாட்டு மக்களிடையே முதல் முறையாக நேற்று (12.3.2021) உரையாற்றினார். அவர் பேசியதாவது:

நான் அதிபராக பொறுப்பேற்றவுடன் 100 நாட்களில் 100 மில்லியன் பேருக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்பது இலக்காக இருந்தது. இப்போது நாம் இலக்கை அடையவில்லை. இலக்கை வென்றுள்ளோம். ஏனென்றால் நாம் 60ஆவது நாளில் 100 மில்லியன் டோஸ் வழங்கும் இலக்கை அடைந்துவிடுவோம். உலகில் எந்த நாடும் இதனை செய்யவில்லை. அனைத்து மாநிலங்கள், பழங்குடியினர்கள், பிராந்தியங்கள் என அனைத்திலும் அனைத்து பெரியவர்கள் மற்றும் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனை வருக்கும் மே ஒன்றாம் தேதிக்குள் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு விடும். இவ்வாறு அதிபர் தெரிவித்தார்.

Comments