ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், சென்னை:

·     இந்திய - சீன எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், சீனா ஆக்கிரமிப்பு செய்த இடங்களில் இருந்து முழுமையாக வெளியேற வில்லை என அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     பிரதமர் மோடி துவக்கியுள்ளபிஎம்.கேர்ஸ்டிரஸ்டுக்கு, ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ரூ.2000 கோடி அளவில் நன்கொடை அளித்துள்ளன.

·     மோடி ஆட்சியில் அரசு வேலைகள் தங்களுக்கு சரியாக கிடைக்கவில்லை என படித்த இளைஞர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற முதல்வர் மம்தா தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை.

·     வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி வருகிற மார்ச் 26-ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்புக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

தி டெலிகிராப்:

·     மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்கத்தாவில் பேரணி நடத்தினர்.

·     எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியாவை ஆளும் பாஜக ஆட்சி உருவாக்க முயல்கிறது. நாடு முழு சுதந்திர நாட்டில் இருந்து கீழே நழுவிச் செல்கிறது. சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சினைகள் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. நாடு பொற்காலத்திற்கு திரும்பும், வலுவான நாடாக மாறும் என்ற ஆளும் கட்சியின் முழக்கத்தை மக்கள் நம்புகின்றனர் என பொருளாதாரப் பேராசிரியர் அனுப் சின்ஹா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

- குடந்தை கருணா

11.3.2021


Comments