தமிழகத் தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க.கூட்டணியை முறியடிப்போம்! முறியடிப்போம்!!

திருச்சியில் மக்கள் இயக்க உரிமைகளுக்கான கூட்டமைப்பு பிரகடனம்

திருச்சி, மார்ச் 7- நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்த லில் பா...-.தி.மு.. கூட்டணியை முறியடிப்போம் என  மக்கள் இயக்க உரிமைகளுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் மே 17 அமைப் பின் தலைவருமான திருமுருகன் காந்தி அறிவித்தார்.

மக்கள் இயக்க உரிமைகளுக்கான கூட்டமைப்பின் சார்பில் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நேற்று (6.3.2021) மாலை மாநாடு நடை பெற்றது.  தொடக்கத்தில் தோழர்க ளின் கலை நிகழ்ச்சிகள் எழுச்சியுடன் நடைபெற்றன. பல்வேறு கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் சார்பில் அதன் நிர்வாகிகள் பங்கு கொண்டு கருத்துரையாற்றினர்.

எந்தெந்த வகைகளில் எல்லாம் மனித உரிமைக்கும், சட்டத்திற்கும் விரோதமான வகையில் அதிமுக அரசு வழக்குகளைப் பதிவு செய்கிறது, தேசத் துரோகம் என்று கூறி சிறையில் அடைக்கிறது என்பதைக் குறித்தெல் லாம் பல்துறைப் பெருமக்கள் கருத் துகளை எடுத்துக் கூறினர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு, குடியு ரிமை எதிர்ப்பு, அணு உலை எதிர்ப்பு, தமிழீழ இனப் படுகொலை எதிர்ப்பு, உயர்மின் அழுத்த கோபுர எதிர்ப்பு, கெயில் குழாய் எதிர்ப்பு, முல்லைப் பெரியாறு உரிமை மறுப்பு, எட்டு வழிச் சாலை எதிர்ப்பு, காவேரி உரிமை மீட்பு, ‘நீட்' எதிர்ப்பு, ஜாதி வன்கொடுமைக்கு எதிரான போராட் டம், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, எழுவர் விடுதலை, நியூட்ரினோ எதிர்ப்பு இவற்றை முன்னிறுத்தி பல்வேறு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது கொடும் சட்டங்களை ஏவி, அதிமுக - பா... அரசு அடக்கு முறைகளின் கொள் கலனாக அத்து மீறிச் செயல்படுத் துவதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேசத் துரோக சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட் டம், ரவுடிப் பட்டியல் தயாரிப்பு, தடாபாடா சட்டங்களை விடக் கொடிய குற்றத் தடுப்புச் சட்டங்களை (UPA) ஏவி அச்சுறுத்தும் போக்கைக் கைவிட வேண்டும் என்று மாநாடு விளக்கிக் கூறியது.

அழிவழி வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், தவறான வழக்குப் புனைந்து சிறையில் அடைக் கப்பட்டுள்ளோர் விடுதலை செய்யப் பட வேண்டும் என்பதும் மாநாட்டின் குறிக்கோளாகிறது.

அரசியல் தொடர்பான மாநா டாக இல்லாவிட்டாலும் நடைபெற விருக்கும் சட்டப் பேரவைத் தேர்த லில், .தி.மு.. - பா... கூட்டணியை வீழ்த்திட தொகுதி வாரியாக பாடுபட வேண்டும் என்ற உணர்வு மேலிட் டெழுகிறது.

முக்கியப் பிரகடனம்

எங்கெல்லாம் மனித உரிமைகள் பறிக்கப்படுகின்றனவோ - எங்கெல் லாம் சட்ட விரோதமாக வழக்குகள் புனையப்படுகிறதோ அங்கெல்லாம் இந்தக் கூட்டமைப்புப் போராடும், களம் காணும் என்று ஒருங்கிணைப்பா ளர் திருமுருகன் காந்தியின் அறிவிப்பும் மாநாட்டின் முத்தாய்ப்பாக அமைந்திருந்தது.

திராவிடர் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், கொளத்தூர் மணி, குடந்தை அரசன், சூசை, ஆரோக்கியராஜ், குணங்குடி அனீபா, ஹென்றி டிபேன், ஜக்கையன், அரங்க குணசேகரன், பேரா.பாத்திமா செழியன், பேரா. செயராமன், பேராசி ரியர் சுந்தரவள்ளி முதலியோர் பங் கேற்று உரையாற்றினர்.

இலால்குடி மாவட்டத் தலைவர் தே. வால்டர் மூலமாக 'திராவிடப்பொழில்' இதழுக்கு இரண்டு ஆண்டு சந்தா 7-க்கான தொகை ரூ. 11,200/-அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினர். உடன் பெருநற்கிள்ளி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள். தமிழ் இலெமூரியா முதன்மை ஆசிரியர் மும்பை சு. குமணராசன் 'திராவிடப்பொழில்' இதழுக்கு ஆண்டு சந்தா ரூ. 800அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். (3.6.2021 பெருவளப்பூர்.)


Comments