இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கட்சி மீண்டும் வெற்றி

ஜெருசலேம், மார்ச் 26- மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் பொருளாதார சீர்கேடு, கரோனா பரவலை கையாள் வதில் ஏற்பட்ட சிக்கல் மற் றும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவற் றால் அந்த நாடு கடந்த 2 ஆண்டுகளில் 4ஆவது முறை யாக பொதுத்தேர்தலை சந் திக்க வேண்டிய சூழல் உரு வானது.

கடந்த 3 முறை நடைபெற்ற தேர்தல்களில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் 23.3.2021 அன்று 4ஆவது முறையாக நாடாளுமன்ற தேர்தல் நடந் தது.

கரோனா அச்சம் காரண மாக குறைவான வாக்குகளே பதிவாகும் என்று எதிர்பார்க் கப்பட்ட நிலையில் மொத்தம் 87.5 சதவீத வாக்குகள் பதிவா கின. வாக்குப்பதிவு முடிந்த தும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிக் குட் கட்சி தலைமையிலான கூட்டணி 59 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. எனினும் ஆட்சி அமைப்ப தற்கு 61 இடங்கள் தேவை என்கிற நிலையில் அந்த கூட்டணிக்கு பெரும் பான்மை கிடைக்கவில்லை. அதேபோல் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு எதிரான கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அவர் களுக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.‌

அதேசமயம் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ள ராம் என்று அழைக்கப்படும் சிறிய அரபுக் கட்சி புதிய அரசை முடிவு செய்யும் கிங் மேக்கர் கட்சியாக உருவெடுத்துள் ளது. அந்தக் கட்சியின் தலை வர் மன்சூர் அப்பாஸ் யாருக்கு தனது ஆதரவு என்று இன் னும் அறிவிக்கவில்லை. ஒரு வேளை அவர் எந்தக் கூட் டணிக்கும் ஆதரவு தெரிவிக் காவிட்டால் இஸ்ரேல் 5ஆவது பொதுத்தேர்தலை யும் சந்திக்க நேரிடும்.

Comments