தமிழர்களைத் தரை மட்டமாக்கும் கூட்டணி - உஷார்! உஷார்!!

பா... தேர்தல் அறிக்கையில் இலங்கைத் தமிழர்கள் என்ற தலைப்பில் - தமிழகத்தில் அகதிகள் முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப் பரிந்துரை செய்யப்படும்.

- பா... தேர்தல் அறிக்கை, பக். 24

இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த (Genocide) இலங்கை அரச பயங்கரவாதக் குற்றத்தைக் கண்டிக்கும் அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்காமல் வெளிநடப்புச் செய்த மனிதாபிமானமற்ற முறையில் - ஈழத் தமிழர்களை வஞ்சிப்பதுதான் மத்திய பா... ஆட்சி. அதனோடு கூட்டணி வைத்துத் துணைபோவது தான் ...தி.மு.. ஆட்சி.

தமிழர்களுக்குத் துரோகம் செய்வோரைத் தமிழர்களே, தண்டிக்க வேண்டாமா?

உங்கள் கையில் உள்ள வாக்குச் சீட்டுதான் இவர்களைத் தண்டிக்கும் மகத்தான ஆயுதம்! ஆயுதம்!

டெப்பாசிட்டை இழக்கச் செய்யும் அளவுக்கு தி.மு.. கூட்டணிக்குப் பேராதரவைத் தாரீர்! தாரீர்!

Comments