செய்தியும், சிந்தனையும்....!

 அஞ்சுவது ஏன்?

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்கக் கோரி மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் தொடர் அமளி - நாள் முழுவதும் அவை ஒத்தி வைப்பு.

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - சமையல் எரிவாயு உருளையின் விலை ஏறிக்கொண்டே போவதும் முக்கியமான மக்கள் பிரச்சினைதானே - இதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் எங்கே விவாதிப்பது - விவாதிக்கத்தானே அவை?

விரலை விடுங்கள் பார்க்கலாம்!

தொலைநோக்குத் திட்டங்களாக மு..ஸ்டாலின் அறிவித்தது -  மத்திய அரசின் திட்டங்கள்: - எல்.முருகன், தமிழக பா... தலைவர்

அப்படியா? இதுவரை எவற்றையெல்லாம் செயல்படுத்தினார்களாம் - விரலை விட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

கால் நூற்றாண்டாகக் காத்திருப்பு

பேரவையில் மகளிர் சமப் பிரதிநிதித்துவம் பெற மத்திய அரசுதான் சட்டம் இயற்றவேண்டும் : - உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்.

33 சதவிகித இட ஒதுக்கீடே கால் நூற்றாண்டாகக் கால் கடுக்கக் காத்திருக்கிறதே!

ஆன்லைனில்' வாக்களிப்பு?

வாடகை வாகன ஓட்டுநர்கள் 8 லட்சம் பேருக்கு தபால் ஓட்டு வழங்கக் கோரி வழக்கு : - தேர்தல் ஆணையம் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

போகிற போக்கைப் பார்த்தால்ஆன்லைன்'மூலம் அனைவரையுமே வாக்களிக்கச் சொல்லுவார்கள் போல் இருக்கிறதே!

கல்வித் திட்டத்தின் கைங்கர்யம்!

குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கல்வித் திட்டங்கள் இதனைத்தானே எதிர்பார்க்கின்றன? 5 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தால் தொழிற்கல்வி என்பது என்ன? கல்வியைக் கண்டால் குழந்தைகள் அஞ்சி ஓடும் நிலை - ஆபத்தின் அறிகுறி!

ஜனநாயகத் தடுப்போ!

போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் துணை முதல்வரின் பண்ணை வீடுப் பகுதியில் இரும்புத் தகடுகள் அமைப்பு.

ஜனநாயக நாட்டில் தடுப்புகள்தான் அதிகம் போலும்!

கார்ப்பரேட் அரசு அல்லவோ!

தொழிலாளர் நல நிதியத்தில் (பி.எஃப்.) புதிதாக சேரும் உறுப்பினர்களுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டு வரும் வட்டி விகிதம் உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்படாது : - .பி.எஃப். அமைப்பு அறிவிப்பு.

நடப்பது கார்ப்பரேட் அரசு - தொழிலாளர்களின் நலன் குறித்து அக்கறை எப்படி இருக்கும்?

என்ன கேஸ்?

ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசம் : - ...தி.மு.. அறிவிப்பு.

என்னகேஸ்' விடுகிறார்களா?

Comments