சீர்காழி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து

"திராவிடம் வெல்லும்" தெருமுனைப்பிரச்சாரக் கூட்டம்மயிலாடுதுறை, மார்ச் 30- சீர்காழி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மு.பன் னீர்செல்வத்தை ஆதரித்து மயி லாடுதுறை மாவட்ட திரா விடர் கழகம் பகுத்தறி வாளர் கழகம் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 27-.3-.2021 மாலை 4 மணி தொடங்கி இரவு 9 மணி வரை  'திராவிடம் வெல்லும்' கிராமப்புற. தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி அரசூர், குன்னம்,பெரம்பூர், புத்தூர் மதகடி, புத்தூர் ,கொள்ளிடம் கடைவீதி ஆகிய இடங்களில் பிரச்சா ரம் நடைபெற்றது. பிரச்சா ரத்தில் மயிலாடுதுறை மாவட்ட திக தலைவர் கடவாசல் குணசேகரன் மாவட்ட பக தலைவர் ஞான.வள்ளுவன், மக்கள் அதிகாரம் வட்டார அமைப்பாளர் ரவி, தமிழக மக்கள் முன்னணி முரளி, அம்பேத்கர்  அரசுப் பணியா ளர்கள் கூட்டமைப்பின் வெண்மணி, கொள்ளிடம் ஒன்றிய கழக செயலாளர் பாண்டுரங்கன் ஆச்சாள்புரம் கழக அமைப்பாளர் பாண் டியன் சீர்காழி நகர கழக தலைவர் சபாபதி ஆகியோர் மக்களிடையே எழுச்சி உரை யாற்றினர்.

பெரியாரிய உணர்வு கொண்ட இளைஞர்கள் இரு பதுக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் கழகக்கொடி களுடன் கிராமப்பகுதிகளில் அணிவகுத்து துண்டறிக்கை களை  வழங்கி வாக்கு சேகரித் தது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

Comments