நன்கொடை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் ஏனாதி கிராமம் பழ.நல்லம்மாள் அவர்களின் வாழ்விணையரும், பழ.நல்.முத்துகுமார், பழ.நல்.நாகராசு, பழ.நல்.வெற்றிவேல் ஆகியோர்களின் தந்தையாருமான பழனி அவர்களின்  (5-3-2021) 16ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000/- நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!

- - - - -

ஆவடி கழக மாவட்டம், திருமுல்லைவாயில் பகுதி பகுத்தறி வாளர் கழக தோழர் பழ.நல்.முத்துகுமார் - மு. கார்த்திகா ஆகியோரது மகனும் அன்புசெழியன், கயல்விழி, இளங்கவி ஆகியோரின் சகோதராருமான பெரியார் பிஞ்சு மு.கா.இளஞ்செழியனின் 6-ஆம் ஆண்டு (4-3-2021) பிறந்தநாள் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500  நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!

- - - - -

சிதம்பரம் மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் - அவ்வை இளங்கோவன் இணையரின் பெயரனும், பாரத பாபு - தென்றல் இணையரின் மகனுமான கவின் ஆறாவது பிறந்த நாள் (3.3.2021) மகிழ்வாக, 'பெரியார் பிஞ்சு' இதழுக்கு ரூ. 500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!

Comments