தி.மு.க.வுக்கு ஆதரவு பெருகுகிறது! பெருகுகிறது!!

 தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் வரவேற்பு

சென்னை, மார்ச் 15- திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து ஜாதியின ரும் அர்ச்சகராகும் வகையில் அர்ச்ச கர் பயிற்சி பெற்ற 205 பேருக்கு அர்ச்சகர் பணி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ் நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாண வர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

அச்சங்கத்தின் தலைவர் வா.ரங்க நாதன்குறிப்பிட்டுள்ளதாவது: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021க் கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை அதன் தலைவர் மு..ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அத்தேர்தல் அறிக்கையின் பக்கம்.71 பத்தி.417இல் தமிழக அரசால் 2006ஆம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்ட 203 எங்கள் மாணவர்களுக்கு தாங்கள் ஆட்சி வந்தவுடன் பணி நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட் டுள்ளதை மனதார வரவேற்கிறோம்.

கருவறைக்குள் பார்ப்பனர் அல் லாதோர் நுழைய இயலாமல் தடுக் கப்படும் சனாதனத்தின் கருவறைத் தீண்டாமை நடவடிக்கையினை, தன் நெஞ்சில் தைத்த முள்ளாக தந்தை பெரியார் அவர்கள் அறிவித்தார். கருவறை நுழைவுப்  போராட்டங்களை நடத்தவும் விழைந்தார். அந்த முள் ளினை தான் அகற்றுவதாக கூறி கலைஞர் அவர்கள் தன் ஆட்சிக் காலத்தில் 1971இல் அர்ச்சகர் பணிநியமனத்தில் வாரிசுரிமையை ஒழித்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்ட விதிகளை கொண்டு வந்தார். இதனை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் தொடர்ந்த வழக்கில் சட்டத் திருத் தத்தினை சரியென்று சொன்ன உச்ச நீதிமன்றம், அர்ச்சகர் நியமனத்தில் குறிப்பிட்ட  தனிப்பிரிவினர்  (Sect)  தான் கணக்கில் கொள்ளப்பட வேண் டும் எனக் கூறிவிட்டது. அதன்பின் 2002ஆம் ஆண்டில் ஆதித்தன் வழக் கில் அர்ச்சகர் நியமனத்தில் ஜாதி பார்ப்பது அரசமைப்பு சட்டத்

திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் மீண்டும் திமுக ஆட்சியில் 2006ஆம் ஆண்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகும் நோக்கில் சிறப்பு அரசாணை  வெளியிடப்பட்டு, பயிற்சி நிலையங் கள் நிறுவப்பட்டு பார்ப்பனரல்லாத ஜாதிகளை சேர்ந்த 207 மாணவர் களாகிய எங்களுக்கு, சைவ மற்றும் வைணவ ஆகமங்களின் அடிப்படை யில் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதனை எதிர்த்து ஆதிசிவாச் சாரியார்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் 2015ஆம் ஆண் டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்தீர்ப் பின் பேரில் குறிப்பிட்ட கோயில்க ளின் ஆகமங்களுக்கு ஏற்ப அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும், அர்ச்சகர் நியமனத்தில் அரசமைப்பு சட்டத் திற்கு விரோதமாக ஜாதிய அடிப் படையில் நியமனங்கள் இருக்கக் கூடாது என மீண்டும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக சட்ட வல்லு நர்கள் கூறுகின்றனர். அதன் தொடர்ச் சியாக ஏற்கெனவே எங்களோடு பயிற்சி முடித்த மாரிசாமி, 2018ஆம் ஆண்டு மதுரை தல்லாகுளம் அய்யப் பன் கோயில் அர்ச்சகராக நியமிக்கப் பட்டார்.  2020இல் தியாகராஜன் என் பவர் நாகமலை -புதுக் கோட்டையில் உள்ள விநாயகர் திருக்கோயிலில் அர்ச்சகராக நியமிக் கப்பட்டார்.

தமிழக அரசால் 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்நாடு இந்து சமய நிறுவனங்களின் பணியாட்கள் பணிவரைமுறை விதிகள், 2020  (Tamil Nadu Hindu Religious Institutions Employees (Conditions of Service) Rules, 2020)  இன் படியும்  முறையான அர்ச் சகர் பயிற்சி நிலையங்களில் பயின்று இருந்தால் அர்ச்சகராவதற்கு ஒருவர் தகுதியுடையவர் என சட்டவிதி உரு வாக்கப்பட்டுள்ளது. மேற்கூறியவற் றின் அடிப்படையில் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்ட நாங்கள் அனைவரும் அர்ச்சகர்களாக ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய சூழலில் ஏற்க னவே தங்கள் ஆட்சி நடந்தபோது கொண்டுவரப்பட்ட அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் மூலம் பயிற்றுவிக்கப்பட்ட எங்கள் அனைவரையும் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அர்ச்சகர்களாக நியமிப் பதாக தி.மு. தன் தேர்தல் அறிக் கையில் குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சி யான அறிவிப்பே.

2020ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தமிழகஅரசு விதிகளில் அர்ச்சகரா வதற்கு 35 வயது என்பது உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டு களாக எங்களுக்கு பணிநியமனம் வழங்கப்படாததினை கணக்கில் கொண்டு இந்த வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும் என எங்களது நியமனத்தில் இருந்த இன்னுமொரு தடையும் அகற்றப்படுதற்கான சாத் தியம், திமுகவின் தேர்தல் அறிக் கையில் வயது வரம்பு தளர்வு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் உரு வாகி உள்ளது எமக்கு பெருமகிழ்வாக இருக்கிறது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற 203 மாணவர்களுக்கு பணிநியமனங் கள் வழங்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதில் தடைகள் ஏதும் இல்லாத நிலையில், அது நிறைவேறும் நாளினை எதிர்பார்த்து நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

எதிர்வரும் ஆண்டுகளிலும் அர்ச் சகர் பயிற்சி நிலையங்கள் நடத்தப் பட்டு, பார்ப்பனரல்லாதோருக்கு அர்ச்சகர் பயிற்சி தொடர்ந்து அளிக் கப்பட்டு அவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் எனும் திமுக வின் தேர்தல் வாக்குறுதி  நடை முறைக்கு வந்தால் தமிழகத்தின் கருவறைகளில் சமூக நீதி முழுமையாக நிலைநாட்டப்படும் என்று சொன் னால் மிகையாகாது. இவ்வாறு தமிழ் நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாண வர்கள் சங்கத் தலைவர் வா.ரங்க நாதன்  குறிப்பிட்டுள்ளார்.

Comments