அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 28 அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மா னத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியராக இருப்பவர்களுக்கு இணை பேராசிரி யர்களாகவும், இணை பேராசிரி யர்களாக இருப்பவர்களுக்கு பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக விண் ணப்பங்களை வரவேற்று 2017 ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப் பட்டது.

இந்த அறிவிக்கையின் அடிப் படையில் விண்ணப்பித்த பலருக்கும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு நடைமுறைகள் நிறைவடைந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ஒரு தீர்மானம் ஒன்றை அண்ணா பல் கலைக்கழக சிண்டிகேட் முடிவு செய்தது.

அந்த தீர்மானத்தில் இணை பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பிக்கக்கூடிய உதவி பேரா சிரியர்களை பொறுத்தவரை அவர்கள் ஒரு முனைவர் படிப்பை மேற்கொள்ளக்கூடிய மாணவருக்கு மேற்பார்வையாளராக இருந்திருக்க வேண்டும் என்றும், அதேபோல பேராசிரியர்கள் பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்கக்கூடிய இணை பேராசிரியர்கள் ஒரு முனைவர் படிப்பு மாணவர் வெற்றிபெற வழி காட்டியாக இருந்திருக்க வேண்டும் என்ற கூடுதல் தகுதியை நிர்ணயித்து அண்ணா பல்கலைகழக சிண்டிகேட் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது.

இதன் அடிப்படையில் தங்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டதாக கூறி அந்த பதவி உயர்வை மறுக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள சிண்டிகேட் தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத்தொடரப்பட் டது.

இந்த வழக்கில் ஏற்கனவே நடந்து முடிந்த தேர்வு முடிவுகளுக்கு இந்த புதிய தகுதியை நிர்ணயம் செய் திருக்கும் தீர்மானம் பொறுந்தாது என்று மனுதாரர்கள் தரப்பில் தெரி விக்கப்பட்டிருந்தது. அதே சமயம், கூடுதல் கல்வி தகுதியை நிர்ணயிக்க எல்லாவிதமான அதிகாரமும் தங் களுக்கு உள்ளதாக அண்ணா பல் கலைக்கழகம் தரப்பில் தெரிவிக் கப்பட்டது.

ஆனால், அண்ணா பல்கலைக்கழக தரப்பு வாதத்தை ஏற்கமறுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன், அண்ணா பல்கலைகழக சிண்டிகேட் நிறைவேற்றியுள்ள தீர்மானமான இந்த கூடுதல் தகுதியை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், தீர்மானம் நிறைவேற்றப்படு வதற்கு முன்பு நடைபெற்ற பதவி உயர்வுக்கான தேர்வு நடைமுறைகளில் கலந்துகொண்டவர்களுக்கு அப் போது இருந்த நடைமுறையை பின்பற்றி பதவி உயர்வு வழங்கி 4 வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல் கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image