தமிழர் தலைவர் உரையை மேற்கோள்காட்டி இளந்தலைவர் ராகுல் காந்தி உரை

இந்தக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் உரையாற்றும்போது, முகக்கவசம் பற்றி பேசினார். கரோனாவை ஒழிக்க முகக்கவசம் மிகவும் முக்கியம். அனைவரும் கரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க முகக்கவசம் அணிந்திட வேண்டும். அந்த முகக்கவசத்தை வைத்து நான் ஒரு கருத்தை கூறுகிறேன். இன்றைக்கு எங்கும் முகக்கவசம் அணிந்தவர்களைப் பார்க்கிறோம். அதை அணிந்திருக்கும்போது நாம் சிரிப்பதை மற்றவர்களால் பார்க்க முடியவில்லை. அதேபோல், மற்றவர்கள் சிரிப்பதை நம்மால் பார்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் அதிமுக பழைய அதிமுக கட்சியே கிடையாது. பழைய அதிமுக என யாரும் எண்ணிவிடாதீர்கள். இது முகமூடி அணிந்திருக்கும் அதிமுகவாகும். அந்த முகமூடியை கழற்றினால், உள்ளே ஆர்எஸ்எஸ், பாஜ முகம் தெரியும். அதனுள் தமிழ் மொழி, கலாச்சாரத்தை அழிக்க வந்துள்ள பாசிச கொள்கை கொண்ட ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மறைந்து கொண்டிருக்கிறதுஇதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மற்றவர்கள் முன் ஒரு தமிழர் கூட தலை குனியமாட்டார்கள். ஆனால், அமித்ஷா, மோகன் பகவத் ஆகியோர் தலை குனியாமல் இருப்பதை விரும்ப மாட்டார்கள். எனது ஒரே கேள்வி, தமிழக முதல்வர், ஏன் அமித்ஷா, மோடியின் காலில் விழுந்து கிடக்க வேண்டும். ஒரு தமிழரும் செய்யாத காரியத்தை தமிழக முதல்வர் மட்டும் ஏன் செய்கிறார்இது நமது பண்பாட்டிற்கு எதிரானது அல்லவா?. மோடி முன் முதல்வர் தலைகுனிந்து நிற்க காரணம் என்னவென்றால், அவர்களிடம் அமலாக்கத்துறை, சிபிஅய் புலனாய்வு பிரிவு இருக்கிறது. தவறு செய்த அவர், தன்னை காப்பாற்றிக் கொள்ள தலை குனிந்து நிற்கிறார். வேறு வழியே இல்லாமல் அப்படி இருக்கிறார். ஆனால், இதற்கெல்லாம் ஒரு விலையை அவர்கள் கொடுத்தாக வேண்டும். அதுவும் ஒவ்வொரு தமிழர்களிடமும் மோடியும், அமித்ஷாவும் கட்டாயம் அதற்கான விலையை கொடுக்கவில்லையென்றால், மிகப்பெரிய விலையை தமிழக மக்கள் கொடுப்பார்கள். மக்களிடம் இருக்கும் தமிழ் மொழி உணர்வு, பண்பாடு, மரபு, பழக்கவழக்கம், முதல்வரிடம் இல்லை

(சேலத்தில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டத்தில் ராகுல்காந்தி ஆற்றிய உரையிலிருந்து....) 

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image