உலக மகளிர்தின விழாவில் பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வருக்கு சிறந்த பெண் மேம்பாட்டாளருக்கான விருது

திருச்சி, மார்ச் 10- அரிமா சங்கம் ராக்போர்ட் இன்ஸ் பயர்  (Lions Club of Tiruchirappalli Rockfort Inspire)    சார்பில் உலக மகளிர்தின விழா திருச்சி கலையரங்கத்தில் 08.03.2021 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

இவ்விழாவில் பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்களுக்கு சிறந்த பெண் மேம்பாட்டாளருக்கான விருது  (Best Women Empowerment Award) வழங்கப்பட்டது.

இவ்விருதினை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கவிஞர் நந்தலாலா மற்றும் திருச்சி அரிமா சங்க ராக்போர்ட் இன்ஸ்பயர் அமைப்பின் தலைவர் லயன் எம். நடராஜன் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.  மருந்தியல் துறையில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல் பட்டு பல இளம் மருந்தாளு நர்களை உருவாக்கிவருவது டன் பெண்கள் மேம்பாட்டிற் காக தொடர்ந்து சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வருவதால் இவ்விருது வழங் கப்பட்டுள்ளது. அதுமட்டு மல்லாமல் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் பெயரால் கடந்த 40 ஆண்டு களாக தமிழர் தலைவர் டாக் டர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் செம்மையாக செயல்பட்டுவரும் பெரியார் மருந்தியல் கல்லூரியை சிறந்த முறையில் நிர்வகித்து வருவதுடன் பெண்கள் மேம்பாடு, பெண்களுக்கான தொழிற்பயிற்சிகள், பெண்கள் நலவாழ்வு சார்ந்த மருத்துவமுகாம்கள் குறிப் பாக பெண்களை அதிகம் தாக்கும் மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனைகளை பெரியார் மருத்துவக்குழுமம் மற்றும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையுடன் இணைந்து தொடர்ந்து நடத்தி வருவதுடன் கிராமப் புற பெண்கள் நலவாழ்விற்காக பாடுபட்டுவருவதால் முனை வர் இரா.செந்தாமரைக்கு இவ்விருது வழங்கப்பட்டு உள்ளது.

கருத்தரங்குகள், மாநாடு கள், முனைவர் பட்ட ஆய் வில் வழிகாட்டுதல், உள் மற் றும் வெளிநாட்டு ஆய்விதழ் களில் பங்களிப்பு, சிறந்த நிர்வாகி என சிறப்பாக செயல்பட்டுவரும் முனைவர் இரா. செந்தாமரைக்கு இவ் விருது வழங்குவ தில் பெருமை கொள்வதாக அரிமா சங்கம்  தெரிவித்தது.

இந்நிகழ்வில் முனைவர் இரா. செந்தாமரையின் பல சாதனைகளுக்கு பக்கபலமாக இருக்கக்கூடிய அவர்களின் வாழ்விணையர் சு.  கோவிந்த ராஜுலு அவர்களுக்கும் இணைத்து சிறப்பு செய்யப் பட்டது.  முன்னதாக திருச்சி மாநகராட்சி தலைமைப் பொறியாளர் எஸ். அமுதவள் ளிக்கும் இவ்விருது வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments