குடந்தை கழகப் பொதுக்குழு, தீர்மான விளக்க பொதுக்கூட்டத்திற்கு கழகப்பொதுச்செயலாளரிடம் பொறுப்பாளர்கள் நன்கொடை

13-3-2021 அன்று குடந்தையில் நடைபெறும் கழகப் பொதுக்குழு, தீர்மான விளக்க பொதுக்கூட்டத்திற்கு திருநாகேஸ்வரம் பசுபதி அவர்களின் மகன்கள் தனபால் மற்றும் கபிலன் ஆகியோர் ரூ 10,000, குடந்தை மாவட்ட துணைச்செயலாளர் .தமிழ்மணி -அறவழகி ஆகியோர் ரூ 5,000, குடந்தை பேராசிரியர் ஜி.பால கிருஷ்ணன் ரூ 2,000 கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயக்குமார் திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம். என் கணேசன், குடந்தை பெருநகரச் செயலாளர் பீ.இரமேஷ்.

13-3-2021 அன்று குடந்தையில் நடைபெறும் கழகப் பொதுக்குழு, தீர்மான விளக்க பொதுக்கூட்டத்திற்கு குடந்தை வழக்குரைஞர் ..மு..சாலியா கார்த்தி ரூ 2,000, திருநாகேஸ்வரம் .தி.மு. நகர செயலாளர் வைரவேல் ரூ 3.000, குடந்தை பெருநகரத்தலைவர் கு.கவுதமன் ரூ 5,000 கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயக்குமார் திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம். என் கணேசன்.

13.3.2021 அன்று குடந்தையில் நடைபெறும் திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானவிளக்க கூட்டத்திற்கு பாபநாசம் பத்திர எழுத்தர் பாரதிதாசன் ரூ.5,000, பாபநாசம் நகரத் தலைவர் வெ.இளங்கோ ரூ 2000, பாபநாசம் ஒன்றியத் தலைவர் சு.கலியமூர்த்தி ரூ 5,000, மணி மெட்ரிக் பள்ளி சார்பில் ரூ 5,000, கணபதி அக்ரகாரம் மு.சேகர் ரூ 3000 ஆகியோர் தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங்கிடம் வழங்கினர். உடன்: குடந்தை மாவட்டச் செயலாளர் சு.துரைராசு, மாவட்ட அமைப்பாளர் .அழகுவேல், பாபநாசம் ஒன்றிய தலைவர் தங்க. பூவானந்தம்.

Comments