இளைஞர்களே இளைஞர்களே உங்களைத்தான்!

படித்தும் பட்டம் பெற்றும் வேலை வாய்ப்பு இல்லை என்பதுதானே உங்கள் கவலை?

கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் அதிமுக ஆட்சியில் வேலை வாய்ப்பு வளர்ந்ததா? வளராவிட்டாலும் பரவாயில்லை.

ரூபாய் மதிப்பு இழப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்புக் காரணமாக, இருந்த வேலை வாய்ப்புகளையும் இழந்து நடுத் தெருவில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோர் பல லட்சம்.

இது அல்லாமல், 3000க்கும் மேற்பட்ட தொழில் பயிற்சி நிறுவனங்கள் பொறியியல் பட்டயம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் எட்டு இலட்சம் மாணவர், மாணவியர் வெளியே வந்த வண்ணம் உள்ளனர்.

இவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிடவில்லையா?

இந்த நிலையில் தான் திமுக உத்தரவாதம் கொடுத்துள்ளது.

"தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் மூன்றரை லட்சம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர்."

"தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், ஓடைகள் உள்ள அனைத்து நீர் வளங்களையும், வனம் உள்ளிட்ட இயற்கை வளங்களையும் பாதுகாக்கவும், கண்காணிக்கவும் 12ஆம் வகுப்பு வரை படித்த 7500 இளைஞர்கள் பணியமர்த்தம் செய்யப்படுவர்."

"தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பொது சொத்துக்களைப் பாதுகாக்கவும் 75,000 சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்."

"இந்து அறநிலையத் துறைக்குக் கட்டுப்பட்ட கோயில்கள், வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான சொத்துக்களைக் கண்காணித்துப் பாதுகாக்கும் பணியில் 25 ஆயிரம் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவர்."

"மக்கள் நலப் பணியாளர்களாக 25000 மகளிர் நியமிக்கப்படுவர்."

தொலை நோக்கோடு இவ்வளவு வேலை வாய்ப்புகளையும் அளிக்கத் திட்டமிட்டு, அவற்றைத் தேர்தல் அறிக்கையாக வெளியிட்ட கட்சிதான் திமுக என்பதை மறவாதீர்!

இளைஞர்களே, இருபால் இளைஞர்களே! உங்கள் எதிர் காலம் ஒளிமயமாக உங்கள் பெற்றோர்களின் கனவுகள் நனவாக நீங்கள் ஆதரிக்க வேண்டியது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைத்தான்.

ஏப்ரல் 6 உங்கள் எதிர்காலத்துக்கான திருப்புமுனை நாள்!

உதயசூரியன் உதிக்கட்டும்!

உங்கள் எதிர்காலம் சிறக்கட்டும்!

செழிக்கட்டும்!!

Comments