இ-பாஸ் கட்டாயம்:

கேரள-தமிழக எல்லையோர தொழிலாளர்கள் பாதிப்பு

பாலக்காடு, மார்ச் 14 - -பாஸ் கட்டாயமாக்கப் பட்டு உள்ள தால், கேரள-தமிழக எல்லையோர தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் -பாஸ் நடை முறையை ரத்து செய்ய வலியுறுத்தி இருக்கின்றனர்.

கேரளாவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு எல் லையில் உள்ள தமிழகத்துக்கு செல்ல அந்த மாநில அரசு -பாஸ் கட்டாயம் என்று அறிவித்து உள்ளது.

ஆனால் கேரள-தமிழக எல்லையில் உள்ள பாலக் காடு, வயநாடு, மலப்புரம் உள் ளிட்ட மாவட்டங்களில்இருந்து கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு வேலைக்காக ஏராளமான தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.

தற்போது --பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ள தால், அவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இதனால் கரோனா காலத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.


Comments