அமித்ஷா வாக்குப்பதிவு இயந்திரத்துக்குள் நுழைந்து பார்த்தாரா? மம்தா கேள்வி

கொல்கத்தா,மார்ச். 30 மத்திய அமைச்சர் அமித்ஷா முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற மேற்கு வங்க தேர்தல் முடிவு குறித்துப் பேசியதற்கு மம்தா  கண்டனம் தெரிவித்துள்ளார்.

 மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் முதலாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.   27.3.2021 அன்று வாக்குப்பதிவு நடந்த 30 தொகுதிகளிலும் கரோனா பரவல் காரணமாக முகக் கவசம், சமுதாய இடைவெளி உள்ளிட்டவை கட்டாயம் ஆக்கப்பட்டது. மேலும் கரோனாவை முன்னிட்டு ஒரு மணி நேரம் கூடுதலாக வாக்கெடுப்பு நடந்தது.

மத்திய அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களிடம், “நான்  பாஜக தலைவர்கள் மற்றும் வாக்குச்சாவடியில் பணி புரிந்த தொண்டர்களிடம் பேசினேன்.  அதன் மூலம் நடந்து முடிந்த 30 தொகுதிகளுக்கான தேர்தலில் நாங்கள் 26 தொகுதிக்கு மேல் வெற்றி  பெறுவோம்.  இது போல் அசாமில்  தேர்தல் நடைபெற்ற 47 தொகுதிகளில் 37 இல் வெல் வோம்" எனக் கூறினார்.

இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா  மத்திய உள்துறை அமைச்சர் தாங்கள்   முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்த 30 தொகு திகளில் 26 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித் துள்ளார்.  அவர் என்ன வாக்குப் பதிவு இயந்திரத்துக்குள் நுழைந்து பார்த்தாரா?

அது என்ன 26 தொகுதிகளில் வெற்றி?   மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் வெற்றி என சொல்லலாமே?  மே மாதம் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வரை காத்திருப்போம்.   திரிணாமுல் காங்கிரஸ் தான் வெல்லும்.  வங்க மாநிலத்தை வெளிமாநிலத்தவர் ஆள முடியாது" எனக் கூறி உள்ளார்.

Comments