மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கைகள்

அண்மையில் சென்னை வண்ணை நகர் முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பொது மக்களின் பயன்பாட்டுக்கு வந்ததுஇதில் புதிதாய் உருவாகியுள்ள புது வண்ணை ரயில் நிலையத்தில் 10 திருநங்கைகளையும்,

4 திருநம்பிகளையும் பணியமர்த்தி, மெட்ரோ ரயில் நிர்வாகம் பெருமைப் படுத்தியுள்ளது. இவர்கள் பயணச்சீட்டு விநியோகம், பயணிகளின் வெப்பநிலை அறிதல், பயணச்சீட்டு பரிசோதனை, பொதுத்தளம், உதவி மய்யம், வாகன நிறுத்து தளம் என பணியாற்றி வரு கின்றனர்.

புது வண்ணை மெட்ரோ ரயில் நிலையத் தில் பணியில் இருக்கும் திருநங்கை வினித்ரா கூறியதாவது, என்னுடன் பணியாற்றும் மாற்றுப்பாலினத்தவர் அனைவருமே பட்ட தாரிகள் தான். நான் லயோலா கல்லூரியில் எம்.. எக்னாமிக்ஸ் படித்திருக்கிறேன். இதற்கு முன்புவரை வருமானத்திற்காக கடை வசூல், பாலியல் தொழில் என்று இருந்தவர்களை இந்த வாய்ப்பு முற்றிலுமாக மாற்றிக் காட்டியிருக்கிறது.

நாங்கள் எங்களுக்கான அங்கீகாரத்தை அடைந்திருக்கிறோம் என்பதே இதில் முக்கியம். இது எங்களுக்கு வேறு விதமான உணர்வு. சொல்ல வார்த்தைகளே இல்லை. ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு முன்பு இந்த சமூகம் எங்களைப் பார்த்த பார்வையும், இப்போது பார்க்கும் பார்வை யிலும் மாற்றம் தெரிகிறது. அணுகுமுறை யிலும் வித்தியாசத்தை நாங்கள் பெரிதாக உணர்கிறோம். பயணிகள் பலரும் கை கொடுத்து எங்களுக்கு வாழ்த்து தெரிவிப் பதோடு, எங்களோடு இணைந்து செல்ஃபி எடுக்கவும் முன் வருகிறார்கள்.

எங்களுக்கு டிக்கெட் ஆப்ரேட்டிங் சிஸ்டம், ப்ளாட்ஃபார்ம் மேனேஜ்மென்ட்,  பயணிகளை வழிநடத்துவது குறித்தெல் லாம் பயிற்சி கொடுக்கப்பட்டது. ஒரு மெட்ரோ நிலையம் இப்போது எங்கள் கையில் வழங்கப்பட்டு உள்ளது. எங் களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நூறு சதவிகிதமும் நல்லவிதமாக பயன்படுத்தி, வரலாற்றில் பேசப்படக்கூடிய விசயமாக மாற்றிக் காட்டுவோம்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் போலவே பல அரசு சார்ந்த நிறுவனங் களும், தனியார் நிறுவனங்களும் படிப் பிற்கு ஏற்ற வேலை வாய்ப்பை எங்களுக்கு வழங்க வேண்டும் என முடித்தார்.சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினராலும் ஒதுக்கப்படும் ஓரினத்தை முன்னேற்றி, சீர்திருத்தி, கவுரவமாக வாழ்வதற்கு வழிவகை செய்வதே மாற்றுப் பாலினத்த வர்களுக்காக இயங்கும் அமைப்பின் அடிப்படை நோக்கமாக இருத்தல் வேண்டும். அதற்கான முன்னெடுப்போடு இவர்கள் முன்னேறிச் செல்வது மகிழ்ச்சியே.

கண்ணை மூடி யோசித்தால்... பிறப்பும் இறப்பும் நம் கைகளில் இல்லைதான். பாலினம் தவறிய குழந்தை யார் வீட்டிலும் பிறக்கலாம். அது யார் குற்றம்? தன்னுடைய பாலினத்தை அடையாளப்படுத்தத்தானே இத்தனை போராட்டங்களும். அதற்காகத் தானே வீட்டைத் துறந்து, உறவைத் துறந்து, சொந்த பந்தங்களைத் துறந்து திசை தெரியாமல் ஓடி வருகிறார்கள்.மாற்றுப் பாலினத்தவர் குறித்த அறிவு இங்கு என்னவாக உள்ளது? அரசாங்கம் ஓரடி எடுத்து வைத்தால் சமூகம் இன்னொரு அடி எடுத்து வைக்கும் என்பதும் இதில் நிதர்சனம்.

Comments