காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.மாங்குடிக்கு கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து

காரைக்குடி தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.மாங்குடிக்கு  காரைக்குடி பெரியார் சிலை அருகில் மண்டல தலைவர் சாமி.திராவிடமணி தலைமையில்  சிறப்பு செய்யப்பட்டது. மாவட்ட தலைவர் அரங்கசாமி, மாவட்ட செயலாளர் வைகறை, மாவட்ட துணை செயலாளர் ..பழனிவேலு, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, சாக்கோட்டை ஒன்றிய தலைவர் கல்லூர் செல்வமணி, நகர தலைவர் .செகதீசன் ஆகியோர் இணைந்திருந்து வாழ்த்தினர். (15-3-2021)

மதுரவாயல் தி.மு.. வேட்பாளருக்கு கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து

மதுரவாயல் தொகுதி தி.மு.. வேட்பாளர் காரம்பாக்கம் கணபதியை வாழ்த்தி ஆவடி மாவட்டம் மதுரவாயல் பகுதி கழகம் சார்பில் ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் மதுரவாயல் பகுதி தலைவர் சு.வேல்சாமி.  துணைத் தலைவர் அண்ணாநிசார் செயலாளர், சு.நாகராஜ் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தை சார்ந்த வடிவேல் ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, கழக வெளியீடானதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் - பா.. - அதிமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்!! ஏன்?’ என்ற புத்தகத்தையும் அளித்தனர்.

Comments