ஆளுமைப் பண்புகளால் முன்னேறிய விஞ்ஞானி சுபத்ரா

மதுரையில் சாதாரண லாரி ஓட்டுநரின் மகளாகப் பிறந்து, உலகில் பல நாடுகளுக்குப் பயணித்து தன் ஆளுமைப் பண்புகளால் மிகப் பெரிய கம்பெனிகளை நிர்வகித்தவர் சுபத்ரா. தனது திறமை நம் நாட்டுக்கு உபயோகப்பட வேண்டும் என சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆதித்யா எனர்ஜி என்ற நிறுவனத்தை அமைத்து அதனை நிர்வகித்து வருகிறார்.

என் அம்மா, அப்பா பெரிய அளவில் படிக்கவில்லை. அதனால் நான் நல்லா படித்து வேலைக்கு போக வேண்டும் என்று விரும்பி னார்கள். என்னை டிப்ளமோ இன் பாலிமர் டெக்னாலஜி பிரிவில் படிக்க வைத்தார்கள்.

அதை முடிச்சிட்டு பி.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். படிப்பு முடிச்ச கையோடு எனக்கு இஸ்ரோவில் விஞ்ஞானியாக வேலைக் கிடைத்தது. அங்கு தான் என்னுடைய லட்சியப் பணி துவங்கியது என்று சொல்லணும்.

எண்ணெய் மற்றும் எரிவாயு செயல்முறை வடிவமைப்பின் பொறியியல் பிரிவில் 17 ஆண்டுகள் பொறியாளராக பணியாற்றினேன். அதுமட்டுமில்லாமல் அங்கு பல்வேறு பெட்ரோ கெமிக்கல் மற்றும் எண்ணெய் சார்ந்து புதிய திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள் ளேன் என்று கூறும் சுபத்ரா தென்கிழக்கு ஆசியா, அய்ரோப்பா, மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள பசுமை மற்றும் பிரவுன்ஃபீல்ட் திட்டங்களுக்கு கருத்து முன்மொழிந்தது மட்டுமில்லாமல்... பொறியியல் வடிவமைப்பு திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார்.

சமூக பங்களிப்பு

நான் படித்து இப்போது நன்றாக சம்பாதிக் கிறேன். அதனால் என்னால் முடிந்தவரை என்னைச் சார்ந்த சமூகத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. முதலில் நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் தான் நம்மை பின்பற்றி பலர் செய்வார்கள். அதனால் வருண் ஆதித்யா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று நிறுவினேன். இதன் மூலம் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துதல், பொருளா தாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருகிறேன் என தெரிவித்துள்ளார்.

தேசிய மற்றும் உலக அளவில்

பெற்ற விருதுகள்

*இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்சில் சிறந்த பெண் பொறியாளர் விருது

*இந்திய மாநாட்டின் செயல்முறை வடி வமைப்பு, பொறியியல் மற்றும் பங்களிப்புக்கான சிறந்த பெண்கள் தலைமைத்துவ விருது   

*திருவள்ளூர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினி யர்களால் தொழில் நிபுணத்துவ அய்கான் விருது

*  I2OR  வழங்கிய சிறந்த பொறியாளர் விருது

*தென்னிந்திய சாதனை பெண்கள் விருதுகள் 2020 ELS edification UK and FWW India வழங்கிய சிறந்த மனிதநேய விருது.

Comments