சென்னை, மார்ச் 28 தி.மு.க.வினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். கண்ணியக் குறைவை தலைமை ஏற்காது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
ஆ.ராசாவின் பேச்சு அடங்கிய காணொலி, பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது. இந்நிலையில், இது குறித்து பெரம்பலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆ.ராசா விளக்கம் அளித்துள் ளார். முதலமைச்சர் பழனிசாமியை நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. முதல்வர் குறித்து நான் பேசியது வெட்டி ஒட்டி சித்தரிக்கப்பட்டது என கூறி உள்ளார்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக் கையில் தி.மு.க.வினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி - ஒட்டி, தவறான பொருள் படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப் போதும் தோல்வி பயத்தால் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.வினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். கண்ணியக் குறைவை தலைமை ஏற்காது என கூறி உள்ளார்.
ஏப்ரல் 3-ஆம் தேதியில் இருந்து
இரு சக்கர வண்டி ஊர்வலத்துக்கு தடை
சென்னை, மார்ச் 28 தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதியில் இருந்து இரு சக்கர வண்டி ஊர்வலம் மேற்கொள் வதற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநி லங்களின் சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் விதிகளை மீறுவோருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. மேலும், தேர்தல் விதிகளை மீற வகை செய்யும் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- எந்தவொரு இடத்திலும் வாக்குப்பதிவு நடக்கும் நாளுக்கு 72 மணி நேரம் முன்பிருந்து (அதாவது ஏப்ரல் 3-ஆம் தேதியில் இருந்து) தேர்தல் நாளான 6-ஆம் தேதி வரை இரு சக்கர வண்டிகளில் ஊர்வலம் செல்ல தடை செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த உத்தரவை தேர்தல் தொடர்புடைய அனை வரும், குறிப்பாக வேட்பாளர்கள், அரசி யல் கட்சிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.