அ.தி.மு.க.வை பா.ஜ.க.விடம் அடகு வைத்து விட்டார்கள்! மணப்பாறை தேர்தல் பரப்புரையில் தமிழர் தலைவர்

மணப்பாறை, மார்ச் 22 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியின் மணப்பாறை தொகுதி .. வேட்பாளர் அப்துல் சமது அவர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு நகர  கழக செயலாளர் ரமேஷ் தலைமை வகித் தார். மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், மாவட்ட செயலாளர் மோகன்தாஸ்நகர் தலைவர் பிச்சை, ஆசிரியர் பழனிச்சாமி, தி.மு..இலக்கிய அணி தமிழ்க் கதிரவன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சுடரொளியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் அதிரடி அன்பழகன், கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் பேசியபின் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவர் தனது உரையில்,

மணப்பாறை நமது சொந்த கொள்கைப்பாறை.  இந்த இயக்கம் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத பேரி யக்கம். செய்கூலி இல்லாமல் சேதாரம் இல்லாமல் ஒரு வெற்றி கூட்டணியை உருவாக்கி உள்ளார் தளபதி ஸ்டாலின்.

முகக்கவசம் அணிவதை கண்டிப்பாக பின்பற்ற வேண் டும். ஏனென்றால் மீண்டும் இரண்டாவது அலை வருகிறது.அதை காரணமாக வைத்து தேர்தலையே தள்ளிவைத்து விட கூடாது அல்லவா?

அவர்கள் தோல்வி பயத்தில் இருக்கிறார்கள். மோடி வித்தை காட்டி மக்களை ஏமாற்றி விடுவதை போல மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் ஏமாற்ற வருகிறார்கள்.இந்த கூட் டணி கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே அமைந்த இலட்சியக் கூட்டணி. ...வுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இடம் கொடுக்க முடியவில்லை.இருந்தாலும் எங்களுக்கு இடம் முக்கியமில்லை.வெற்றி ஒன்றுதான் இலக்கு என்று சொன்னவர்கள் ...வினர். இன்றைக்கு இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக் கிறார்கள். .தி.மு..வை பா...விடம் அடகு வைத்து விட்டார்கள். அதையும் சேர்த்து மீட்டெடுக்கும் பணியை தளபதி ஸ்டாலின் செய்து விடுவார்.

டில்லியிலிருந்து ஒரு திட்டம் வருகிறது. எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று..இருபது இடங்களை பெற்ற பா... எங்கள் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா சொல்கிறாரே.அதை எதிர்த்துக் கேட்கும் துணிவு  அதிமுகவுக்கு உண்டா? மறுப்பு சொன்னார்களா? இந்தியாவிலேயே அரசுத் துறையில் ஒவ்வொரு மாவட்டத் திலும் மருத்துவ கல்லூரியை அமைத்த சாதனை தி.மு..வை சேரும்.கலைஞரை சேரும்.

இதையெல்லாம் பார்த்து சிந்தித்து, ... பொதுச் செயலாளர் அருமை தோழர் அப்துல் சமது அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப் பெரிய வெற்றியை அடையச் செய்ய வேண்டும் என்று உங்களை யெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பரப்புரை கூட்டத்தில் நகர தி.மு..செயலாளர் கீதா. .மைக்கேல்ராஜ், ஒன்றிய செயலாளர் சி.ராமசாமி, நகர தி.மு..துணை செயலாளர் கேஆர்.ராமசாமி மாவட்ட பிரதிநிதிகள் சரவணன், ஜேம்ஸ், நிஜாமுதீன், செல்வம், சி.பி.அய் ராம்கோபால், மாவட்ட குழு உறுப்பினர் சவுகத் அலி, .யூ.மு.லீக் நகர் தலைவர் பக்ருதீன்,  தி...பேரவை அமைப் பாளர் இருதயராஜ், வையம்பட்டி ஒன்றிய தலைவர் சக்திவேல், மணப்பாறை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் ஒன்றிய தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார். பரப்புரை பயணக் கூட்டத்தில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப் பாளர் இரா.குணசேகரன், ஒருங்கிணைப்பாளர் பேரா..சுப்பிர மணியம், மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

Comments