நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· மராத்தாவினர்க்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா குறித்த வழக்கின் வாதங்கள் நிறைவுற்று, தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
தி ஹிந்து:
· தற்போது மாநிலப் பட்டியலில் உள்ள சுகாதாரத் துறையை அரசமைப்புச் சட்டத்தின் ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றிட பதினைந்தாவது நிதி ஆணையத் தலைவர் என்.கே.சிங் கருத்து.
தி டெலிகிராப்:
· ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார் செல்வாக்கு வளர வளர, ஹிந்துக்களின் மனம் சுதந்திர சிந்தனைக்கான திறனில் சுருங்கி விட்டது,. மத்திய அமைச்சர்களும் முதலமைச்சர்களும் அறிவியலில் மூடநம்பிக்கையை போதிக்கிறார்கள்.
இந்த சமுதாயத்தில் தொடரும் அநீதிகள் குறித்த உண்மையை முன்வைக்கத் துணிந்த ஊடகவியலா ளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப் பாளர்கள் மீது மோசமான தாக்குதல்கள் தொடரப்படுகிறது.
21ஆம் நூற்றாண்டில், உலகம் மிகவும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந் திருக்கும் போது, இந்தியாவின் பிரதமர் நம்மை உள்நோக்கி மாற்றிக் கொள்ளும்படி கேட்கிறார். நாங்கள் கேட்க மாட்டோம் என வர லாற்றாசிரியர் ராம்சந்திர குஹா குறிப்பிட்டுள்ளார்.
பி.பி.சி. நியூஸ் தமிழ்:
· புதுச்சேரியில் உள்ள வாக்காளர்கள், பாரதிய ஜனதா கட்சியில் சேருமாறு, ஆதார் எண் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.
அந்த குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பின் அடிப் படையில், குறுஞ்செய்தி பெறும் சம்பந்தப் பட்ட நபர் எந்த தொகுதியைச் சேர்ந்தவரோ அந்த சட்டமன்ற தொகுதி பெயரில் பூத் வாரியாக பாஜக வாட்ஸ்-அப் குழு இயக்கப் படுகிறது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
- குடந்தை கருணா
27.3.2021