சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பலில் உள்ள ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள் எனத் தகவல்

கெய்ரோ, மார்ச் 29 எகிப்தில் சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத சரக்கு கப்பலை நகர்த்துவதில் சிக்கல் தொடர்கிறது. இதனால் பன்னாட்டு கப்பல் போக்குவரத்து நிலை குலைந் துள்ளது.

எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும் அய்ரோப் பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாக உள்ளது. 1869-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட 193 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கால்வாய் உலகின் முக்கிய நீர்வழிகளில் ஒன்றாகும்.

ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றிச் செல்ல வேண்டியதை தவிர்த்து பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயண தூரத்தை குறைக்கும் நோக்கில் இந்த கால்வாய் கட்டப்பட்டது. பன்னாட்டு வர்த்தகத்தில் அதிலும் குறிப்பாக எண்ணெய் வர்த்தகத்தில் இந்த சூயஸ் கால்வாயின் பங்கு மிக முக்கியமானது. உலகளாவிய வர்த்தக கப்பல் போக்குவரத்தில் சுமார் 12 சதவீதம் சூயஸ் கால்வாய் வழியாகவே செல் கிறது.

இந்நிலையில் சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண் டிருந்த 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப் பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்கிவ்வன் என்ற சரக்குக் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ் கால்வாயின் இரண்டு பக்கக் கரைகளில் மோதி சிக்கிக்கொண்டது.

இதனால் அந்த வழித்தடத்தில், கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

280-க்கும் அதிக மான கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கின்றன. இந்த சம்பவத்தால், பன்னாட்டு வர்த்தகம், பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த கப்பலின் உரிமையாளரான ஜப்பானைச் சேர்ந்த ஷோய் கிசென் நிறுவனத்தின் தலைவர் யுகிடோ கப்பலை மீண்டும் மிதக்க வைப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருவ தாகவும், இவை எதுவுமே பலன் தராத பட்சத்தில் கப்பலில் உள்ள கன்டெய் னர்கள் அனைத்தையும் அகற்றி விட்டு கப்பலை விடுவிப்பதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.

ஆனால் இது சற்று கடினமானதாக அமையும் என்று அவர் கவலை தெரிவித்தார்.

இதனிடையே கப்பலை நகர்த்தும் பணியில் எந்தவித முன்னேற்றமும் காணப்படாத நிலையில் கடலில் காத்திருக்கும் கப்பல்களில் சில தங்கள் பாதையை மாற்ற தொடங்கி

யுள்ளன.

சூயஸ் கால்வாய்க்கு மாற்று வழியாக ஆசியா - அய்ரோப்பா இடையே பயணிக்க வேண்டுமானால் ஆப்ரிக்க கண்டத்தின் தெற்கு முனை யான நன்னம்பிக்கை முனையைச் சுற்றித்தான் செல்ல வேண்டும். ஆனால் அதற்கு சுமார் 2 வார காலம் கூடுதல் நேரம் தேவைப்படும்.

அதற்கேற்ப எரிபொருள், உணவு கையிருப்பு ஆகியவையும் அதிகமாகும். இதனால் பெரும்பாலான கப்பல்கள் சூயஸ் கால்வாய் திறப்புக்காக தொடர்ந்து காத்து நிற்கின்றன.

இந்த நிலையில், சிக்கிக்கொண்டுள்ள சரக்கு கப்பலில் உள்ள  25 பணியாளர் களும் இந்தியாகள் என்றும், எகிப்து நாட்டின் கால்வாய் ஆணையத்தின் இரண்டு மாலுமிகளும் கப்பலில் உள்ளனா கப்பல் நிறுவனம் சாபில் தெரிவிக்கப்பட்டது. அவாகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனா என்று கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image