சென்னையில் மீண்டும் வேகமெடுக்கும் கரோனா அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்புகின்றன

சென்னை, மார்ச் 22  சென்னையில் மீண்டும் கரோனா வேகமெடுத்து வருகிறது. இதனால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகள் நிரம்பி வருகின்றனர்.

 சீனாவில் தொடங்கிய கொரோனா தமிழகத்துக்கு கடந்த ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி வந்தது. இதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. அந்த வகையில் குறைந்தபட்சமாக கடந்த பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி 438 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கரோனா பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருட காலம் முடிந்த பின்னர் மீண்டும் தமிழ கத்தில் கரோனா வேகமெடுக்க தொடங்கி உள்ளது. நாள் ஒன் றுக்கு சராசரியாக 150 பேர் பாதிக்கப்பட்ட சென்னையில், தற்போது 400-க்கும் அதிகமா னோர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

 சென்னையில் கடந்த 15 நாட் களாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை மிகவும் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவ மனைகளில் கரோனா பாதித் தோர் கூட்டம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி கரோனா பிரத்யேக மருத்துவமனைகளான சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை யில் 350 படுக்கைகளில், தற்போது 306 கரோனா நோயாளிகளும், கிண்டி கிங்ஸ் அரசு கரோனா மருத்துவமனையில் 500 படுக் கைகளில் 490 கரோனா நோயா ளிகளும் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

 இதைப்போல் வெறிச்சோடி காணப்பட்ட ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை கரோனா வார்டில் 273 நோயாளிகளும், ஸ்டான்லி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் 90 நோயாளி களும், கீழ்ப்பாக்கம் அரசு மருத் துவமனை கரோனா வார்டில் 50 நோயாளிகளும்  சிகிச்சை பெற்று வந்தனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவ தாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.


Comments