பூவிருந்தவல்லி கழக தோழர்கள் முயற்சியால் மாங்காட்டில் பெரியார் சிலை மறைப்பு அகற்றம்

சென்னை, மார்ச். 12 சென்னை, மாங்காட்டில் உள்ள பெரியார் சிலையை தேர்தல் ஆணையப் பணியாளர்கள் துணியைச் சுற்றி மூடினர். ஆவடி மாவட்டத் தோழர்களின் சட்டபூர்வ எதிர்ப்பின் காரணமாக மூடிய துணி அகற்றப்பட்டது.

கடந்த 4-3-2021 அன்று மாலை சென்னை மாங்காடு பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை துணியால் மூடப்பட்டிருந்தது. தகவல் அறிந்த மாவட்ட துணைச் செயலாளர் பூவை . தமிழ்ச்செல்வன், கழக பொதுக்குழு உறுப்பினர் பூவை மணிமாறன் ஆகியோர் மாவட்ட அமைப் பாளர் உடுமலை வடிவேல் ஒருங்கிணைப்பில் விடுதலையில் வெளியிடப்பட்ட உயர்நீதிமன்ற உத்தரவை நகலெடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து, வருவாய் ஆய்வாளர் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.

வருவாய் ஆய்வாளர், இந்தப்பணிகளுக்காக நியமனம் செய்யப்பட்டிருக்கும் சிறப்பு வட்டாட்சியர் தான்பெரியாரும் ஒரு கட்சித்தலைவர்தான். ஆகவே மூடுங்கள்என்று சொன்னார். அதனடிப் படியில்தான் பெரியார் சிலை மூடப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

அவருக்கும் சிறப்பு வட்டாட்சியருக்கும் மாவட்ட துணைச் செயலாளர் பூவை .தமிழ்ச்செல்வன் நேரிலும், அமைப்பாளர் உடுமலை வடிவேல் தொலைபேசியிலும் ஏராளமான விளக்கங்கள் சொல்லியும் இரண்டு நாட்கள் மூடிய துணியை அகற்றாமல் இருந்தனர். 2016 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் பெரியார் சிலையை மூடமாட்டோம் என்று ஒப்புக்கொண்டிருந்த உத்தரவு ஒன்றையும் இணைத்து அனுப்பப்பட்டது. ஆனாலும் தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் சரியான பதிலளிக்காமல் இருந்தனர்.

6ஆம் தேதி சட்டவிரோதமாக மூடப்பட்டிருக்கும் பெரியார் சிலையைச் சுற்றியுள்ள துணியை உடனடியாக அகற்றுங்கள். இல்லையென்றால் தலைமைக் கழகத்தின் அனுமதி பெற்று மாங்காடு பெரியார் சிலைக்கருகில் ஆவடி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று சொன்னதின் பேரில் 7-3-2021, ஞாயிறன்று இரவு 8:30 மணியளவில் துணியை அகற்றியதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இப்பணிகளில் மாங்காடு பகுதி தி.மு.. வைச் சேர்ந்த தமிழரசன், கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பாளர் மனோகரன் ஆகியோர் உடனிருந்து ஒத்துழைத்தனர்.

Comments