துள்ள வேண்டாம் கோணிப் புளுகர்கள்

திராவிடர் கழகத் தலைவர் கூறிய கருத்துக் குப் பதில் கூறத் துப்பு இல்லை. ஆனால் குறுக் குச் சால் ஓட்டும் குள்ள நரிப் புத்திக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

தி.. வீரமணியிட மிருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறு கெட்ட குருமூர்த்திகள் கூறியதற்கு முகம் வீங்கும் அளவுக்கு 'எங்கள் பய ணத்தை முடிவு செய்வது பெரியார் திடலே!' என்று தி.மு.. தலைவர் தளபதி மு.. ஸ்டாலின் பதிலடி கொடுக்கவில்லையா!

திராவிடர் கழகத் தலைவர் கூறுபவைகளை யார் கேட்க வேண்டுமோ அவர்கள் எல்லாம் கச்சிதமாகக் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். கோணிப்புளுகர்களின் பாராட்டுத் தேவையில்லை ரொம்பத்தான் துள்ள வேண்டாம்!

Comments