மோடி, அமித்ஷா காலடியில் ஆட்சியாளர்கள் மானமுள்ள தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்

 சென்னை பிரச்சாரத்தில் ராகுல்காந்தி ஆவேசம்

சென்னை, மார்ச் 29 தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித் துள்ள தருணத்தில் காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று (28.3.2021) சென்னை வந்தார்.

அடையாறு தொலைபேசி இணைப்பகம் அருகே நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங் கிரஸ் வேட்பாளர்கள் அசன் மவு லானா (வேளச்சேரி), செல்வப் பெருந்தகை (சிறீபெரும்புதூர்), முனி ரத்தினம் (சோளிங்கர்), சைதாப் பேட்டை தொகுதி தி.மு.. வேட் பாளர் மா.சுப்பிரமணியன் ஆகி யோரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவர், பா...வில் சேர்ந்த ஒளிப்படத்தை பார்த்தேன். அமித்ஷா சோபாவில் அமர்ந்திருக்க அவர் முன்பு கும்பிடு போட்டபடி மக்கள் பிரதிநிதி நின்று கொண் டிருந் தார். ஒரு மக்கள் பிரதிநிதி இவ்வாறு அடிமைபோல் நிற்பதை நான் விரும் பவில்லை. பா...வை பொறுத்தவரை இந்த மாதிரி பழக்க வழக்கங்களைத் தான் எதிர்பார்க்கிறது.

மானம் உள்ள தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்

தொன்மையான பாரம்பரியமும், கலாச்சாரமும் மிகுந்த தமிழகத்தின் முதல்-அமைச்சர், ஆட்சியாளர்கள் மோடி மற்றும் அமித்ஷா காலடியில் விழுந்து கிடக்கிறார்கள்.

தமிழகத்திற்கு நீண்ட நெடிய வர லாறும், பாரம்பரியமும் உள்ளது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த மாநி லத்தின் முதல்-அமைச்சர் இவ்வாறு விழுந்து கிடப்பதை பார்த்தால் கோபம் தான் வருகிறது. மானம் உள்ள தமிழர்கள் யாரும் காலில் விழுவதை விரும்ப மாட்டார்கள். அதை ஏற்க மாட் டார்கள். ஆனால், தமிழக முதல்-அமைச்சருக்கு காலில் விழ வேண்டிய கட்டாயம் ஏற்பட் டுள்ளது.

நேர்மை இழந்து விட்டார்

மக்களிடம் சுரண்டிய பணத்தால் அவர் நேர்மை இழந்துவிட்டார். அதனால்தான் காலில் விழவேண்டிய கட்டாயம். எனவே தான் நான் முழு வலிமையையும் கொடுத்து பா..., ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றை வீழ்த்தப் போராடுகிறேன்.

தற்போது தமிழரின் பண்பாட்டின் மீது தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் மிகப்பெரிய பண பலம் உள்ளது. இந்த தாக்குதலை தொடங்கி வைத்தது ஆர்.எஸ்.எஸ்.தான். அவர்கள் எதிர்பார்ப்பது அவர்கள் முன்பு தமிழகம் மண்டியிட வேண்டும் என்பதுதான்.

தலைகுனிந்த சரித்திரம் இல்லை

3 ஆயிரம் ஆண்டு பழைமையான வரலாறு கொண்ட தமிழர்கள் யாரி டமும் தலைகுனிந்த சரித்திரம் இல்லை. தமிழர்கள் எல்லோரையும் மரியாதை யாகவே நடத்துவார்கள். யாரையும் மரியாதைக் குறைவாக நடத்துவதில்லை.

இதற்கு முன்னர் நடந்த தேர்தல் எல்லாம் அரசியல் கட்சிகளுக்கு இடையே நடந்த தேர்தல். இந்த தேர்தல், .தி.மு.., மோடி, அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் ஆகியோருக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே நடக்கும் தேர்தல். இந்த தேர்தல் முடிவில் .தி.மு.- _ பா... கூட்டணி சுக்கு நாறாக நொறுங்கி விடும். இவ்வாறு அவர் பேசினார்.

ராகுல்காந்தியின் பேச்சை, அய்..எஸ். அதிகாரி பணியை துறந்து சமீபத்தில் காங்கிரஸ் கட் சியில் சேர்ந்த சசிகாந்த் செந்தில் மொழிபெயர்த்தார்.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், தமிழக காங் கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகத் துறை தலைவர் . கோபண்ணா, செயலாளர் அகரம் கோபி, தி.மு.. எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் எம்.பி. ஜே.எம்.ஆரூண் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments