செயற்கை செவ்வாய் கோளிற்கு பயணம் செய்த சுவிட்சர்லாந்து மாணவர்கள்

செவ்வாய்க்கோளை ஆராய நாசா ஒரு பக்கம் தனது பிரிசெவரன்ஸ் விண் கலத்தை அனுப்ப, இன்னொரு பக்கம், சுவிட்சர்லாந்தில் சில மாணவர்கள் “நாங்களும் செவ்வாய் கோளுக்குச் செல்லப் போகிறோம்“ எனப் புறப்பட்டு விட்டனர். 

 நவீன உலகில் மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை வளர்க்க செயற்கை யாக மைதானத்தில் உருவாக்கப்பட்ட செவ்வாய் கோள் போன்ற ஒரு மாதிரியில் ராக்கெட் போன்ற வடிவமைக்கப்பட்ட பேருந்தில் 9 மாணவர்கள் விண்வெளி வீரர்கள் போன்ற கவச உடை அணிந்து சென்றனர். 

சுவிட்சர்லாந்து விண்வெளி வீரர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட செயற்கை செவ்வாய் கோளுக்கு செல்லும் பேருந்தில் அமர்ந்த உடன் ராக்கெட் புறப்பட்டு விண்வெளிக்கு செல்வது போலவும் உள்ளே காட்சிகள் ஓடி மாணவர்களுக்கு உண்மையான விண்வெளிப் பயணம் செய்வது போன்ற அனுபவத்தைக் கொடுக்கும். 

சுமார் 40 நிமிடம் மாணவர்களின் பயணம் தொடர்ந்தது. இறுதியாக சுவிட்சர்லாந்தின் வேறு ஒரு பகுதியில் செயற்கை செவ்வாய் கோளில் மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இறங்கினர். 

அவர்களின் கவச உடைகளில் ஆக்சிஜன் உள்ளிட்ட உபகரணங்களைப் போன்றவைகள் பொருத்தப் பட்டிருந்தன, 

மாணவர்கள் அனைவருக்கும் செவ்வாய் கோளின் தரைதளம் எப்படி இருக்கும் என்று அறிந்துகொண்டு அந்த அனுபவத்தை எழுதுமாறு பணித்தனர். பின்னர் அவர்கள் மீண்டும் அதே ராக்கெட் வடிவப் பேருந்தில் பள்ளிக்கு அழைத்துவரப்பட்டனர்.  அனுப வங்களுடன் சேர்ந்த கற்றல் அணுகு முறையின் ஓர் அங்கமாக  செவ்வாய் கோள் பயணம் அமைந்தது என்று மாணவர் களை ஒருங்கிணைத்த பள்ளி ஆசிரியர் கூறியுள்ளார்.

Comments