ஊரடங்கு தளர்வால் சென்னையில் காற்று மாசு பெருமளவு அதிகரிப்பு: கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

சென்னை, மார்ச் 30- கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற் போது சென்னையில் காற்று மாசுபாடு பெருமளவில் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை களை அரசு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 2.80 கோடிக்கும் மேலான வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு நாளும் புதிதாக ஆயிரக்கணக் கான வாகனங்கள் ஆர்டிஓ அலுவலகங் களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இவை சாலைகளில் இயங்குவதால் கடு மையான காற்று மாசுபாடு ஏற்படுகிறது.

மற்ற இடங்களை விட சென்னையில் அதிக வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதால், காற்று மாசுபாடு இங்கு கூடுதலாக ஏற்படுகிறது. இதேபோல் இங்கு தொழிற்சாலைகளும் அதிகமாக இருக்கிறது. இதுவும் காற்று மாசு பாட்டுக்கு ஒரு காரணமாக அமைந்து உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த மார்ச்சில் கரோனா பரவல் ஏற்பட்டது. இதையடுத்து கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் முதல் தொழிற்சாலைகள், வாகனப் போக்குவரத்து என அனைத்தும் நிறுத்தப்பட்டது. வாகனங்கள் இயங் காததால், அதிலிருந்து நச்சுகலந்த புகை வெளியேறுவதும் குறைந்தது.

மேலும் சென்னை மற்றும் அதை சுற் றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற் சாலைகளும் இயங்கவில்லை. இதனால் இங்கிருந்தும் நச்சுக்காற்று வெளியேற வில்லை. எனவே, ஊரடங்கு காலத்தில் சென்னையில் காற்று மாசுபாடு பெரு மளவில் குறைந்திருந்தது. பிறகு கரோனா பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தொழிற்சாலைகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் அனைத் தும் தமிழகத்தில் செயல்பட துவங்கின. மேலும் அரசு பேருந்துகள், தனியார் வாக னங்கள் உள்ளிட்டவையும் இயங்குகி றது.

இதனால் ஊரடங்கு நேரத்தில் குறைந்திருந்த காற்று மாசுபாடு, தற் போது மீண்டும் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. படிப்படியாக அதிகரித்து வந்த காற்று மாசுபாடு, தற்போது மேலும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற் போது காற்று மாசுபாடு பெருமளவில் உயர்ந்திருப்பது மத்திய மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தக வலின் மூலம் தெரியவந்துள்ளது. அதா வது, நாடு முழுவதும் காற்று மாசுபாடு குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது. அந்தவகையில் சென்னையில் முக்கிய இடங்களில் காற்றின் தரம் கண்காணிக்கப்படுகிறது.

அவை ஆலந்தூர், மணலி கிராமம், மணலி, வேளச்சேரி ஆகும். தற்போது புதிதாக பெருங்குடி, ராயபுரம், கொடுங் கையூர், அரும்பாக்கம் ஆகிய இடங்  ளி லும் காற்றின் தரம் கண்காணிப்படுகிறது. இங்கு, காற்றின் தரம் குறித்து சோதனை நடத்தப்பட்டதில், தளர்வு வழங்கப் பட்ட பிறகு காற்று மாசுபாடு படிப்படி யாக அதிகரித்து வருவது தெரியவந்து உள்ளது. அதாவது ஆலந்தூர் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட காற்றின் தரம் குறித்த ஆய்வில் கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி 2.5 மைக் ரான் அளவு 15.7 ஆக இருந்தது. இது தற்போது அதிகரித்துள்ளது. கடந்த 25ஆம் தேதி நிலவரப்படி 2.5 மைக்ரான் அளவு 52.77 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் ஒவ்வொரு இடங்களிலும் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. எனவே இதைக்கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை அரசு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments