தமிழர் தலைவர் பங்கேற்கும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை சிறப்பாக நடத்திட அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

அரியலூர், மார்ச் 19 அரியலூர் மாவட்ட திராவிடர் கழக  கலந்துரை யாடல் கூட்டம் 16.3.2021 செவ்வாய் மாலை 5.30 மணியளவில் தொடங்கி அரியலூரில் சிவக் கொழுந்து இல்லத் தில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க, மாவட்ட செயலாளர் .சிந்தனைச் செல்வன் வரவேற்றார்.

மண்டல தலைவர் இரா. கோவிந்த ராசன், மண்டல செயலாளர் சு.மணி வண்ணன், பொதுக் குழு உறுப்பினர் சி.காமராஜ், மாவட்ட தொழி லாளரணி தலைவர் சி.சிவக் கொழுந்து, ஒன்றிய செயலாளர் மு.கோபால கிருட்டிணன்ஆகியோர் முன் னிலை வகித்தனர்.  கழகப்பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் மத வெறிக்கூட்டத்தின் அடிமைகளாகத் திகழும் .தி.மு. ஆட்சியை அகற்றி தி.மு..ஆட்சி வர வேண்டும் என்ப தனை வலியுறுத்தி சிறப்புரையாற்றி னார்.

தீர்மானங்கள்: நடைபெற உள்ள 2021 சட்டமன்ற தேர்தலில் மதசார் பின்மை, சமூக நீதி, சமதர்மம், சமத்துவம், பாலியல் நீதி, மாநில சுயாட்சி, மொழி உரிமை, பண்பாட்டை பாதுகாக்கும் முற் போக்கு கோட்பாடுகளை கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற் போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற பாடுபடுவதென நிறைவேற்றப் பட்ட குடந்தை கழகப் பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று களப்பணி ஆற்றுவதென ஒருமனதாக முடிவு செய்யப்படுகிறது

 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் தேர்தல் பரப் புரைக் கூட்டங்களை 20.3.2021 அன்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் அரியலூரில், இரவு 8 மணியளவில் செந்துறையிலும் சிறப் பாக நடத்துவ தெனவும் வெற்றி வேட்பாளர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர்குன்னம், கு.சின்னப்பா அரியலூர், .சொ..கண் ணன் ஜெயங்கொண்டம் ஆகியோரது வெற்றிக்கு கழகத் தோழர்கள் அயராது பாடுபடுவ தெனவும் ஒரு மனதாக தீர்மானிக்கப் படுகிறது.

அரியலூர் ஒன்றிய தலைவர் மருதமுத்து பொதுக்குழு உறுப்பினர் .செல்லமுத்து இளைஞரணி தலைவர் மதியழகன், செந்துறை ஒன்றிய தலைவர் மா.சங்கர், ஒன்றிய செய லாளர் முத்தமிழ்ச் செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் அறிவன், தா.பழூர் ஒன்றிய தலைவர் இராமச் சந்திரன், ஒன்றிய செயலாளர் பி.வெங்கடாசலம், மண்டல மாணவர் கழக செயலாளர் செ. வெற்றிச்செல்வன், மாவட்ட துணை தலைவர் இரா திலீபன்,  திருமானூர் ஒன்றிய தலைவர் சிற்றரசு, மாவட்ட அமைப்பாளர் ரத்தின ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் சோ.. சேகர், இளைஞரணி பொறுப்பாளர் திராவிட விஷ்ணு ,வீராக்கன் தியாகு ,பொன்பரப்பி சுந்தரவடிவேல், கீழமாளிகை ரஜினிகாந்த் ,தமிழ் புலி பழமலை நாதபுரம்  கருப்புசாமி, கழகப் பேச்சாளர் வடலூர் புலவர் சு.இராவணன், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், குழுமூர் சுப்பராயன் உள்ளிட்ட கழக பொறுப் பாளர்கள் சிறப்பாக பங்கேற்றனர்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
கோயிலும், 'தினமணி'யும்!
எங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்!
Image