மயிலாடுதுறை, மார்ச் 17- மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலை, அரசு பேருந்து பணிமனை முன்பு அமைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு நகராட்சி சார்பில் கூண்டு அமைக்கும் பணி திங்கள்கிழமை இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்டது.
மயிலாடுதுறையில் பெரியார் - அம்பேத்கர் சிலை களுக்கு கூண்டு அமைக்கும் முயற்சியை உடனே நிறுத்து மாறு திராவிடர் கழகம், திரா விட முன்னேற்ற கழகம், விடு தலை சிறுத்தைகள் மற்றும் தமிழ்தேசிய அமைப்புகள் இணைந்து
மயிலாடுதுறை கோட்டாட்சியரும், சட்ட மன்ற தேர்தல் அலுவலரு மான ஜே.பாலாஜியை
15.5.2021 மாலை சந்தித்து மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத் தில் கோட்டாட்சியர் முன்னி லையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. கூட்ட முடிவில் தேர்தல் பணிக்காலம் முடியும் வரை சிலைகளுக்கு கூண்டு அமைக் கும் பணி நடைபெறாது என கோட்டாட்சியர்
எழுத்து பூர்வமாக உத்திரவாதம் அளித்தார். நகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளும் அக் கடிதத்தில் கையொப்ப மிட்டனர்.
மாவட்டத்தில் பெரியார்-அம்பேத்கர் சிலைகள் எங்கே னும் மூடப்பட்ட செய்தி கிராம நிர்வாக அலுவலர் மூலம் தெரியப்படுத்தினால் அவை உடனே அகற்றப்படும் என்றும் குறிப்பிட்டார்.