காரைக்காலில் தந்தை பெரியார் சிலையைதுணியால் மூடிய தேர்தல் ஆணையம்

 கழகப் பொறுப்பாளர்களின் முயற்சியால் மூடப்பட்ட துணி அகற்றம்

காரைக்கால், மார்ச் 9- காரைக்கால் தேர்தல் ஆணையத்தால் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே உள்ள தந்தை பெரியார் சிலை துணியால் மூடப்பட்டது.

இந்தத் தகவலை அறிந்த கழகத் தோழர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் திரண்டனர். பின் புதுச்சேரி மாநில கழக தலைவர் சிவ.வீரமணி ஆலோசனையின் பேரில் காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் காரைக்கால் மண்டல திராவிடர் கழகத்தின் சார்பாகவும் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் .எம். எச். நாஜீம் அவர்கள் ஆதரவுடன் தந்தை பெரியார் சிலையை மூடக்கூடாது என்ற நீதிமன்ற ஆணை நகலுடன் புகார் மனு மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட் டது.

இதைத்தொடர்ந்து தந்தை பெரியார் சிலையில் உள்ள துணி அகற்றப்படும் என மாவட்ட துணை ஆட்சியர் உறுதி அளித்ததன் பேரில் மாவட்ட தோழர்கள் கலைந்து சென் றனர் .இந்த நிகழ்ச்சியில் காரைக்கால் மண்டல திராவிடர் கழகத் தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி, காரைக்கால் மண்டல செயலாளர் பொன். பன்னீர் செல்வம், காரைக்கால் மண்டல காப் பாளர் ஆர். ஜெயபாலன், காரைக்கால் மண்டல இளைஞரணி தலைவர் மு.பி. பெரியார் கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுநாள் காலையில் மாவட்ட ஆட் சியரால் தந்தை பெரியாரின் சிலையின் மீது மூடப்பட்ட  துணி அகற் றப்பட்டது‌. இது கழகத்திற்கும் மதச்சார் பற்ற கூட்டணிக்கும் கிடைத்த  வெற்றி யாகும்.

Comments