எந்த தேர்தலிலும் இனிமேல் ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி கிடையாது: சித்தராமையா

மைசூரு, மார்ச் 15- இனிமேல் எந்த தேர்தலிலும் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று மைசூருவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல் அமைச்சர் சித்தரா மையா தெரிவித்துள்ளார்.

மைசூருவுக்கு முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க் கட்சி தலைவருமான சித்த ராமையா வந்தார்.  பின்னர் சித்தராமையா செய்தியாளர் களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மைமுல்(மைசூரு பால் டைரி) தலைவர் பதவி தேர்த லில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி வைக்காது. மைமுல் தலைவர் தேர்தல் மட்டுமல்ல, இனி மேல் எந்த தேர்தலிலும் காங் கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைக் காது. குமாரசாமி மட்டுமல்ல, யார் கேட்டுக் கொண்டாலும் ஜனதா தளம்(எஸ்) கட்சி உட னான கூட்டணி சாத்தியம் இல்லை. கூட்டுறவு சங்க தேர் தல்கள் கட்சி சின்னத்தை வைத்து நடக்காது. சுதந்திர மாக நடக்கிற தேர்தல். அத னால் அந்தத் தேர்தலுக்கும், நமக்கும் சம்பந்தம் இல்லை.

ரமேஷ் ஜார்கிகோளி ஆபாச காணொலியில் டி.கே.சிவக்குமாருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதற்கு நான் எந்த கருத்தும் தெரி விக்கமாட்டேன். இந்த சி.டி. விவகாரத்தில் தன்னை மாட் டிவிடுகிறார்கள் என்பதை அவரே தெரிவித்துள்ளார்.

இந்த ஆபாச காணொலி தொடர்பாக எஸ்.அய்.டி. விசாரணை நடந்து வருகிறது. அந்த விசாரணையின் முடி வில் உண்மைகள் வெளிவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சித்தராமையா விடம், எச்.டி.குமாரசாமி பேசியது குறித்து செய்தியா ளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது சித்தராமையா, குமாரசாமி பேச்சுக்கெல்லாம் பதில் அளிக்க மாட்டேன் என்று கூறினார். சமீபத்தில் மைசூரு மாநகராட்சியை ஜனதாதளம்(எஸ்) கட்சியு டன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Comments