"மேற்கு வங்கத்தை ஆள்வதற்கு கொள்ளைக்கார பா.ஜ.வை அனுமதிக்க மாட்டோம்!"

மம்தா ஆவேசப் பேச்சு

கொல்கத்தா, மார்ச் 22 கொள்ளை அடிப்பதில் பெரும் வல்லமை பெற்ற கட்சி பாஜ. மேற்கு வங்கத்தை அக்கட்சி ஆள்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட் டோம், என்று மம்தா கூறியுள் ளார்.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங் களாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் வரும் 27ஆம் தேதி நடக்கிறது. இதற்கான பிரச்சாரத்தில் பாஜ தலைவர்களும், பிரதமர் மோடி யும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேபோல், 3ஆவது முறையாக ஆட்சியை தக்கவைப்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் தலை வரும், முதல்வருமான மம்தா அடிப்பட்ட காலுடன் சக்கர நாற்காலியில் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஹால்டியாவில் 20.3.2021 அன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது, உலகிலேயே கொள்ளை அடிப் பதில் பெரும் வல்லமை பெற்ற கட்சி பாஜ.தான். பிஎம் கேர் நிதியின் மூலமாக அவர்கள் வசூலித்த தொகை, என்ன ஆனது என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். மேற்கு வங்க மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே தீர்வு. மக்களை கொல்வதற்கு கலவரத்தை உரு வாக்கும் பாஜ.வை ஒரு போதும் மேற்கு வங்கத்தை ஆள்வதற்கு அனுமதிக்க மாட்டோம்.

தேர்தலை ஜனநாயக முறைப் படி அந்த கட்சி சந்திப்பதில்லை. அச்சுறுத்தலின் மூலம் மட்டுமே பாஜ வளர்கிறது. பிரதமர் நரேந் திர மோடி இந்திய பொருளா தாரத்தை சீரழித்துக் கொண்டி ருக்கிறார். ஏற்கனவே ரயில்வே, தொலைத் தொடர்பு நிறுவனம், காப்பீடு நிறுவனங்கள், வங்கிகள் போன்றவை விற்கப்பட்டு விட் டன. இங்குள்ள ஹால்டியா கப்பல் துறைமுகத்தையும் அவர் ஒருநாள் விற்று விடுவார். இவ் வாறு அவர் பேசினார்.

Comments