சென்னை, மார்ச் 28 தமிழகத்தை மின்மிகை மாநிலம் என அதிமுக அரசு கூறுவது உண்மையல்ல என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மின்மிகை மாநிலமாக உள்ளதாக அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரங்களின் போது கூறியுள்ளனர். இதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-
தமிழகத்தை மின்மிகை மாநிலம் என அதிமுக அரசு கூறுவது உண்மையல்ல. மின் மிகை மாநிலம் என்றால் தமிழ்நாடு தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு மிகுதி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்கிறது என்று பொருள்.
தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையில் 50% மட்டுமே தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது, 50 % வெளிமாநிலங்களில் வாங்குகிறோம். தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று எப்படிச் சொல்லமுடியும்?
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.