முதல்வர் நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் இடையே மோதல்

சென்னை, மார்ச் 30 ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் திரைக் கலைஞர் குஷ்புவுக்கு ஆதரவாக முதல் அமைச்சர் பழனிசாமி வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (29.3.2021) பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக, அதிமுக சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள சுதந்திர தின பூங்கா முன்பாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட அதிமுக நிர்வாகி ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும் நிர்வாகி பின்னால் நின்ற நபர்கள் ஆதிராஜா ராமை தரக்குறைவாகப் பேசியதாகவும் கூறி, அவரின் ஆதரவாளர்கள் மேடைக் குக் கீழே நின்று கூச்சல் போட்டனர். இதனைத்தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். கொடிக் கம்பம், இருக்கை உள்ளிட்டவற்றைக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டர். இதில் செல்வராஜ் என்ற நபருக்குத் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்பிலிருந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத் தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Comments