மணப்பாறையில் “திராவிடம் வெல்லும்“ - பொதுக்கூட்டம்

மணப்பாறை, மார்ச் 10- மணப் பாறையில்திராவிடம் வெல் லும்திராவிடர் கழகப்  பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

மணப்பாறை நகர பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகே திராவிடர் கழகம் சார்பில் 28.2.2021 அன்று மாலை 6.30 மணியளவில்தடு மாறும் தமிழகம் - போராடும் திராவிடர் கழகம்' என்ற தலைப்பில் திராவிடர் கழகப் பேச்சாளர் பெரியார் செல் வன் சிறப்புரையாற்றினார்.

அவர் இந்நிகழ்வில் பெரி யார் பெருந்தொண்டர் சு.பழ னிச்சாமி உரையாற்றி னார். கூட்டத்திற்கு நகர செய லாளர் சி.எம்.எஸ்.ரமேஷ் தலைமையேற்றார். நகர பொருளாளர் பி.சந்திரன், தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர், மாவட் டத் தலைவர் இரும்பொறை பிச்சை, வையம்பட்டி ஒன்றிய தலைவர் சக்திவேல், புத்தா நத்தம் ஒன்றியத் தலைவர் இரா.எத்திராஜ், கழக வழக் குரைஞர் துரை.அழகிரி, மருங்காபுரி ஒன்றிய தலைவர் ராஜா, செல்லம்பட்டி ஒன் றிய தலைவர் குழந்தைவேல் மற்றும் திமுக சொற்பொழி வாளர் துரை.காசிநாதன் மற் றும் திமுகவின் சார்பில் நகர செயலாளர் கீதா .மைக்கேல் ராஜ், விவசாய அணி சார்பாக கே.ஆர்.ராமசாமி, .ரவி, பொறுப்பாளர் அணி வி.எஸ்.சீனிவாசன், நகர தலைவர் பகுருதின், அவைத் தலைவர் கோ.அன்பழகன் மற்றும் மாற் றுக் கட்சியினர் இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்றனர். நன்றியுரையை ஒன்றிய தலை வர் ஆர்.பாலமுருகன் கூறினார்.

Comments