கபசுர குடிநீர் விநியோகத்தை தீவிரப்படுத்த வேண்டும் சித்த மருத்துவர்கள் வலியுறுத்தல்

 காரைக்குடியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் எஸ்.மாங்குடி அறிமுக கூட்டம் மேனாள் மத்திய நிதியமைச்சர் .சிதம்பரம் தலைமையில் மேனாள் அமைச்சர் மு.தென்னவன் முன்னிலையில் நடைபெற்றதுமண்டல தலைவர் சாமி திராவிடமணி உரையாற்றினார்மாவட்ட தலைவர் அரங்கசாமிமாவட்ட செயலாளர் வைகறைமாவட்ட துணை செயலாளர் பழனிவேலுநகர தலைவர் செகதீசன்தி.புரூனோ என்னாரெசு உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

சென்னை, மார்ச் 21- இந்தியா வில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. தமி ழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

அந்த சமயத்தில் கரோ னாவுக்கு உரிய மருந்து இல் லாததால் சித்த மருத்துவ மருந்தான கபசுர குடிநீர் மாற்று மருந்தாக தெரிவிக்கப் பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கபசுர குடிநீரும் வழங்கப்பட் டது. மேலும் கபசுர குடிநீரை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டதால் மக்களிடம் வரவேற்பு பெற் றது. கபசுர குடிநீரை பலரும் வாங்கி குடித்தனர். சில மாதங் களுக்கு பிறகு தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் குறைந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கரோனா வைரசின் பரவல் சற்று அதிகரித்து இருக்கிறது. இதையடுத்து கபசுர குடிநீர் வினியோகத்தை தீவிரப் படுத்த வேண்டும் என்று சித்த மருத்துவர்கள் வலியு றுத்தி இருக்கிறார்கள்.

இதை குறித்து சித்த மருத்துவர்கள் கூறியதாவது:-

கபசுர குடிநீர் பலவகை காய்ச்சல் குறிப்பாக சளி பாதிப்பு அதிகம் கொண்ட நிமோனியா போன்ற காய்ச் சல்களுக்கும், பாரம்பரிய மருந் தாக கொடுக்கப்படுகிறது.

கரோனாவும் நிமோனியா போன்ற பாதிப்பை கொண் டதுதான். தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்தபோது ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவ முகாம்கள் ஆகியவை மூலம் மக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இதுபோன்ற மாற்று மருத் துவ சிகிச்சைகளை மேற்கொண் டதால் மற்ற மாநிலங்களில் கரோனா அதிகரித்த போதும், 2ஆவது அலை முன்கூட்டியே ஏற்பட்ட போதும் தமிழகத் தில் நிலைமை மோசமடை யவில்லை. எனவே, கடந்த ஆண்டை போன்று தற்போ தும் கபசுர குடிநீர் வினியோ கத்தை அரசு முன் எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மாநில பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்கப்பட்டு கூடுதலாக கபசுர குடிநீர் வழங்கப்பட் டது.

கடந்த சில மாதங்களாக தொற்றுக் குறைந்ததால் குறைவான அளவே கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. எனவே, மீண்டும் கபசுர குடிநீர் வினியோகத்தை அதி கரிக்க வேண்டும் என்றனர். கடந்த ஆண்டு 400 டன் கபசுர குடிநீர் சூரணம் தயா ரித்து அரசுக்கு வழங்கினோம் என்றும் தற்போதும் போது மான அளவு தயாரித்து வழங்க தயாராக உள்ளோம் என்றும் தமிழக அரசின் டாம்ப்கால் நிறுவன அதி காரிகள் தெரிவித்தனர்.


Comments