"திராவிடம் வெல்லும்" தெருமுனைக் கூட்டங்கள் ஒன்றியம் தோறும் நடத்தப்படும்

மயிலாடுதுறை, மார்ச் 18 மயிலாடு துறை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில்  கலந்துரையாடல் கூட்டம் குத்தாலம் ஒன்றியம் கொக்கூர் கிராமம்  பொதுநல மன்றத்தில் 16.3.2021 அன்று காலை 11 மணியளவில் திராவி டர் கழக ஒன்றியத்லைவர் மற்றும் காப்பாளர் சா.முருகையன் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றிய செயலாளர். பால சுந்தரம் ஒன்றிய துணைத் தலைவர் .முத்தையன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் கட்பீஸ்.கிருட்டி ணமூர்த்தி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் வரும் சட்ட மன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து' திராவிடம் வெல் லும்' தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களை ஒன்றியம் தோறும் நடத்துவது, திராவி டர் கழக வெளியீடான' திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் ஏன்?' நூலை மக்களிடம் பரப்புவது, விடு தலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மார்டன் ரேஷனலிஸ்ட் இதழ் சந்தாக்கள் சேர்ப்பது குறித்து கழக மாவட்ட தலைவர் கடவாசல் குண சேகரன், மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஞான. வள்ளுவன்ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர்.

கூட்டத்தில் திமுக கிளை செயலர்கள் எம்.பிரபாகரன் ஜெ.கலை யரசன் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சின்னகுமார் கொ..கலைக் குமார், சி. சின்னகுமார்,  ஆர்.சங்கர், பி.கலியபெரு மாள், துரைராஜன், ஈரோடு ராம சாமி, குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டு தந்தை பெரியார் மூன்று முறை வருகைதந்துள்ள பெருமை பெற்ற கொக்கூர் மண்ணில் வரும் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற முனைந்து பாடுபடுவோம் திராவிடர் கழகம் காட்டும் வழியில் பயணிப்போம் என்று உணர்ச்சி உரையாற்றினர்.  தேர்தல் பிரச்சார தெருமுனைக் கூட்டங்களை மங்கைநல்லூர், கொக்கூர்,எஸ்.புதூர்,  கருப்பூர் கோமல் ஆகிய இடங்களில் நடத்துவது என தீர் மானிக்கப் பட்டது.கிராம மக்கள் பெரும் அளவில் ஆர்வமுடன் வருகை தந்து கலந்துரையாடல் கூட்ட மாகத் தொடங்கி பிரச்சாரப் பொதுக்கூட்ட மாக முடிந்த கூட்டத்திற்கு ஒன்றிய கழக இளைஞரணிச்செயலாளர் பா.வசந்தகுமார் நன்றிகூற நிறைவுற்றது.

மயிலாடுதுறை

மாலை 5 மணியளவில் கழக அலுவலகத்தில் மயிலாடு துறை நகர ஒன்றிய கலந்து ரையாடல் நகரத் தலைவர் சீனி.முத்து தலைமையில் நடைபெற்றது. நகர செய லாளர் அரங்க.நாகரத்தினம், மாவட்ட துணை செயலர் கட்பீஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

மயிலாடுதுறை நகரம் மற்றும்  ஒன்றியத்தில் கழகத் தோழர்கள் முனைப்போடு பணியாற்றி தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண் டும் என் றும் பொதுக் குழுவில் தமிழர் தலைவர் அறி வுறுத்தியவாறு களப்பணிகள் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் மாவட்ட செயலர் கி.தளபதிராஜ் இரு வரும் விரிவாக கலந்து கொண்ட தோழர்களிடம் எடுத்துரைத்தனர்.

முன்னதாக மாலை நான்கு மணியளவில்  வருவாய் கோட் டாட்சியர் முன்னிலையில் கலந்துகொண்டு தந்தை பெரியார், அண்ணல் அம் பேத்கர் சிலைகட்கு கூண்டு அமைப்ப தையும், தேர்தலை யொட்டி மூடி வைப்பதையும் நிறுத்தி வைப்பதாக கோட் டாட்சியரிடம் எழுத்துபூர்வ உறுதியினைப்பெற ஒத்துழைத்த திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெரியார் இயக்கத்தோழர்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப் பட்டது. மயிலாடுதுறை நகரத் தில் புகைவண்டி நிலையம் தந்தை பெரியார் சிலை அருகில் மற்றும் தரங்கைசாலை ஆகிய இடங்களிலும் ஒன்றிய அளவில் நீடூர், திருவழுந் தூர்,சீனிவாசபுரம் ஆகிய இடங்களில் திராவிடம் வெல் லும் தெருமுனைக் கூட்டங் களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் கழகத் தோழர்கள் மற்றும் பகுத்தறி வாளர் கழக தோழர் ஆசிரியர் சி.காமராஜ், முரளி தரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித் தனர்.

 மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஞான.வள்ளு வன் நன்றி கூறினார்.

Comments