செய்தியும், சிந்தனையும்....!

யாருக்காகவோ அல்ல!

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் : - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் ஆணை

தலைக்கவசம் (ஹெல்மட்) அணிவதும், முகக்கவசம் அணிவதும் யாருக்காகவோ அல்ல - நமக்காகத்தான்.

தனி மனிதர்மீதான தாக்குதல்!

.தி.மு..வின் தேர்தல் அறிக்கை ஏட்டிக்குப் போட்டியாக உள்ளது : - இரா.முத்தரசன், சி.பி.அய். மாநில செயலாளர்

.தி.மு.. எப்பொழுதுமே கொள்கையை மய்யப்படுத்திப் பிரச்சாரம் செய்வதில்லை. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே கலைஞரை மய்யப்படுத்தித்தான் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தனர். இப்பொழுது தளபதி மு..ஸ்டாலினை மய்யப்படுத்திப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அண்ணா பெயர் என்பது அவர்களுக்கு வெறும்லேபிள்' -

வ்வளவுதான்!

பாட்டும் நானேபாவமும்' நானே!'

இரயில்வே ஒருபோதும் தனியார் மயம் ஆகாது : - இரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல்

இரயில்வே தனியார் மயம் என்பதைக் கசிய விட்டவர்களும் இவர்களே. கசிவை அடைப்பதும் இவர்களே - வள்ளலார் சொன்ன பிள்ளை விளையாட்டே!

ஆரத்தி' என்பது இதற்காகத்தானா?

ஆரத்தி எடுத்தவர்களுக்கு - .தி.மு.. வேட்பாளர் நத்தம் விசுவநாதன் பணப் பட்டுவாடா!

வெறும் நோட்டீஸ்தானா?' என்று வாக்காளர்களே கேட்கும் பரிதாப நிலை ஏற்பட்டுவிட்டதே! 'உரிமையை விற்காதே!' என்ற மக்கள் இயக்கம் தொடங்கப்பட வேண்டும்.

, இப்பொழுதுதான் புரிகிறதா?

பகவான் ராமன், கிருஷ்ணன் அவதாரம் பிரதமர் மோடி : - உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத்சிங் ராவத்.

, இப்பொழுதுதான் உண்மை புரிகிறது - மோடி இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார் என்பதற்குக் காரணம் புரிகிறது.

பா...வின் பரிதாபம்!

என்னை வேட்பாளராக பா... அறிவிப்பதா? பழங்குடியினத்தவரான மணிகண்டன் (கேரளாவில்) நிராகரிப்பு.

பா...வின் பரிதாப நிலை - வேட்பாளராக நிறுத்த ஆள் கிடைக்காததால் சம்பந்தப்பட்டவருக்கே தெரியாமல் பெயரை அறிவிக்கும் அறிவு நாணயத்தை என்னவென்று சொல்லுவதோ!

.பி.எஸ்.சைக்

கேளுங்கள்!

ஜெயலலிதா மரணத்தின் உண்மை வெளிவராதது ஏன்? - முதலமைச்சருக்கு தளபதி மு..ஸ்டாலின் கேள்வி

அவர் மரணத்தில் மர்மம் உள்ளது என்று சொன்ன .பி.எஸ்.ஸே இப்பொழுதுபம்மு'கிறாரே - விசாரணை நீதிபதி முன் செல்ல மறுக்கிறாரே!

மனிதத்தின்

முகத்தில் கரி!

பாதாள சாக்கடை விஷவாயு தாக்கி மரணங்கள் - அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது : - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி.

மன்னிக்கப்படவே  முடியாத மனித உயிர்மீது தொடுக்கப்பட்ட மரணத் தாக்குதல்.

கந்துவட்டியா?

ரயில்வே பிளாட்ஃபார்ம் டிக்கெட் இனி ரூ.அய்ம்பது.

இரயில்வே துறை கந்து வட்டி கொள்ளைக்காரராக மாறுகிறதா?

அப்படி ஒரு திட்டம்

உள்ளதோ?

கரோனா பரவலால் தமிழகத்தில் தேர்தல் நடக்குமா? தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்.

ஆழம் பார்க்கிறார்களோ!

பூணூல்

கோணல் புத்தி!

கேள்வி: பா...வில் சேர்ந்துள்ள ரவுடிகள் பட்டியலை ஸ்டாலின் வெளியிட்டுள்ளாரே! தி.மு..வில் இருப்பவர்கள் புத்தர், வள்ளலாரின் வழித் தோன்றல்களா?

பதில்: பா...வில் ரவுடிகளை பட்டியலிட்டு விட முடியும். தி.மு..வில் ரவுடிகள் அல்லாதவர்களைப் பட்டியலிட்டு விட முடியும் : - ‘துக்ளக்', 24.3.2021

பூணூல்களின் கோணல் புத்தி என்பது இதுதான். ஆக, ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்குக் குருமூர்த்திகளிடம் பதில் இல்லை என்பது மட்டும் உண்மையோ உண்மை!

Comments