ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     கல்வி, வேலைவாய்ப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கப்பட வேண்டும் என தெலுங்கானாவில் ஆட்சியில் இருக்கும் டி.ஆர்.எஸ். அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்திட முடிவு.

·  மத்திய, மாநில தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெறுவது தேர்தல் செலவினங்களைக் குறைக்கும் என நாடாளுமன்றப் பணியாளர் நலன் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது.

·     மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தி அதிகம் காணப்படுவது குறித்தும், தலைவர்கள் கலந்து கொண்ட பேரணிக்கு குறைவான கூட்டம் கூடியது குறித்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்மாநில பாஜக தலைவர்களிடம் கவலை  தெரிவித்துள்ளார்.

·     குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 20ஆம் தேதி போராட்டம் நடத்திட அசாம் மாணவர் அமைப்பு முடிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     தமிழக மக்களின் நலன் குறித்து பேசாமல், மதம், கடவுள் பற்றி பேசும் பாஜகவை தமிழ் நாடு ஏற்காது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி.

·     அரசமைப்புச் சட்டத்திருத்தம் 102இன் படி, பிற்படுத்தப்பட் டோர்க்கான ஜாதிகளை அடையாளம் கண்டிடும் அதிகாரம் குடியர சுத் தலைவருக்கு மட்டுமே உண்டு என மராத்தா இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாதம்.

· ஒரு சிலரின் நன்மைக்காகவே அரசுடமை வங்கிகள் தனியார்மய மாக்க மோடி அரசு முடிவெடுத்துள்ளது என மாநிலங்களவை காங் கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அவையில் பேச்சு.

·   தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் துணை ஆளுநருக்கே அனைத்து அதிகாரம் என்ற வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதா, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது என தலையங்கத்தில் செய்தி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·  மோடி ஆட்சியில் இந்திய ஜனநாயகம் வெளிநாட்டவர்கள் கருதுவதை விட மிக ஆபத்தான நிலையில் உள்ளது. அனைத்து அரசின் கட்டமைப்புகளையும் ஆக்கிரமிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சை தொடர்ந்து எதிர்ப்பேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சூளுரை.

- குடந்தை கருணா

17.3.2021

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image