திருச்சியில் தந்தை பெரியார் சிலை முன் ஆர்ப்பாட்டம்

திருச்சி, மார்ச் 12- தந்தை பெரியார் சிலை கிருஷ்ணகிரியில் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து, சிறு புத்தி உள்ள மனநலம் இல்லாத பாசிச பாஜக வினரை கண்டித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை முன் திராவிடர்

கழக மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங் கிணைப்பு குழு உறுப்பினர் நிர்மலா முன்னிலையில் மக்கள் அதிகாரம் .... பொறுப்பாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண் டனர்.

மகளிர் தினத்தை முன்னிட்டு தந்தை பெரியார் சிலைக்கு அம்பிகா கணேசன் தலைமையில் மகளிரணி தோழியர்கள் மாலை அணிவித் தார்கள் தொடர்ந்து மக்கள் அதி காரம் தோழியர்கள் மாலை அணி வித்தனர். மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குழு உறுப்பினர் நிர்மலா தலைமையில் மாலை அணிவித்தார்கள் மற்றும் திராவிடர் கழக தோழர்கள் புடைசூழ கண்டன ஆர்ப்பாட்டம் ஆரம்பித்து வானைப் பிளக்கும் வண்ணம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தலைமை திருச்சி மாவட்ட திரா விடர் கழக தலைவர் ஞா.ஆரோக்கிய ராஜ், மாவட்ட செயலாளர்  இரா. மோகன்தாஸ், மாநகர தலைவர் .துரைசாமி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அம்பிகா கணேசன், மாவட்ட மகளிரணி தலைவர் ரெஜினா மேரி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சங்கீதா, மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி, மாவட்ட மகளிரணி துணை செயலர் வசந்தி, திருவெறும்பூர் ஒன் றிய தலைவர் மாரியப்பன் விஜயா, திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர், மாநகர அமைப்பாளர் கனகராஜ், பீமநகர் பகுதி தலைவர் முபாரக் அலி, திருவரங்கம் நகர தலை வர் கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தேவா, திருவரங்க நகர செயலாளர் முருகன், திருவரங்க படிப்பக நிர்வாகி திருநாவுக்கரசு, வண்ணாரப்பேட்டை பகுதி தலைவர் ஜெயராஜ், மகளிர் அணி ஒன்றிய தலைவர் ரூபி, பெரியார் பெருந் தொண்டர் கபிலன், பெரியார் பிஞ்சு தமிழ்ச்செல்வன், அம்பிகா, பெல் ஆறுமுகம் மற்றும் .... மாவட்ட செயலாளர் ஜீவானந்தம். மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஞா. ராஜா. ராஜா.ஆனந்து மற்றும் தோழர்கள் தோழி யர்கள் கலந்துகண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறு மிகள் மீது கூட்டு பாலியல் வன்முறை, காஷ்மீரில் ஆசிபா கருவறையில் பாலியல் வன்கொடுமை, படுகொலை, காவல்துறை பெண் எஸ்பியிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட காவல்துறை உயர்அதிகாரியை உட னடியாக கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத் தப்பட்டது.

Comments