அனைவரும் முகக்கவசம் அணியுங்கள்; தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்

பிரச்சாரத்தில்  மு..ஸ்டாலின் அறிவுறுத்தல்

சேலம்,மார்ச் 18- அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் அனை வரும் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். தடுப் பூசியைத் தவறாமல் போட் டுக் கொள்ளுங்கள் என திமுக தலைவர் தளபதி தி.மு.. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பொது மக்க ளிடம் வேண்டுகோள் வைத் தார்.

சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் பேசியதாவது:

கரோனா தமிழ்நாட் டுக்குள் நுழைந்த நேரத்தில், அம்மா ஆட்சியில் கரோனா வராது என்று முதல்வர் பழனிசாமி சொன்னார். அத னால் எவ்வளவு பேர் பாதிக் கப்பட்டு, எவ்வளவு பேர் இறந்துள்ளனர். குடும்ப அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் 5,000 ரூபாய் கொடுங்கள் என்று சொன்னேன். நிதி இல்லை என்று சொன்னார்கள்.

கொள்ளையடிப்பதற்கு அந்த நிதியைப் பயன்படுத்திக் கொண்டார்கள். கரோ னாவைப் பயன்படுத்திக் கொள்ளை அடித்தவர்கள் இவர்கள். முகக் கவசத்தில் கொள்ளை, ப்ளீச்சிங் பவு டரில் கொள்ளை, துடைப் பத்தில் கொள்ளை. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக ஆட்சி வெறும் 1,000 ரூபாய் மட்டும் அறிவித்தது.

நாம் இந்தத் தேர்தல் அறிக்கையில் மீதமிருக்கும் 4,000 ரூபாயை திமுக ஆட் சிக்கு வந்ததும் அத்தனை குடும்பங்களுக்கும் வழங்கு வோம் என்று அறிவித்துள் ளோம். திமுக ஆட்சியில் வேளாண்துறைக்குத் தனி பட்ஜெட் போடப்படும். மாணவர்கள் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு குறைவான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்படும்.

இப்போது கரோனா அதிகமாகப் பரவிக் கொண் டிருக்கிறது. இனிமேல் தயவு செய்து யாரும் முகக்கவசம் போடாமல் இருக்காதீர்கள். தடுப்பூசியும் தயவுசெய்து போட்டுக்கொள்ளுங்கள். நானும் போட்டுக்கொண் டேன். நாம் நன்றாக இருந் தால்தான் நாட்டுக்குப் பணி யாற்ற முடியும். எனவே, தயவுசெய்து யார் யார் தடுப் பூசி போடவில்லையோ, உட னடியாகத் தடுப்பூசி போடு கிற முயற்சியில் ஈடுபட வேண் டும்

இவ்வாறு அவர் பேசி னார்.

Comments