திருவள்ளுவருக்குச் சாயம் பூசும் மதவாதிகள்

காலத்தால் மூத்தமொழி என்பது தமிழாகிவிட்டது. இந்த உண்மையை இலக்கியங்கள் வழி நிறுவியபோது நையாண்டியும் பகடியும் செய்து கொண் டிருந்தனர் சிலர். இப்போது அகழ்வாய்வு மேலும் பல உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளது. நாகரிகமும் பண்பாடும் மாந்தவினத் தோற்றத்தின் வெளிப்பாடு.

உலகில் தோன்றிய முதலினம் தமி ழினமே என்பது அண்மையில் வெளியான தொல்லியல் ஆய்வுத் துறையின் கணிப்பு. பண்டைய இலக்கியங்கள் வழி நிலை நாட்டப்பட்டதொன்மைக்கு இலக்கியம் மட்டுமல்லாது, அகழ்வாய்வில் கிடைத்த கருவிகளும், பாண்டங்களும், அணிகலன் களும், நாணயங்களும் தமிழர்கள் உல கெங்கும் கொண்டிருந்த தொடர்பை நிலை நாட்டுவன.

இஃது ஒரு புறமிருக்க, திருக்குறளுக்கு வெளிச்சம் போட யார் யாரோ முன்வந் தனர். சுருங்கச் சொல்லி விளங்க வைத்த குறட்பாக்களுக்கு உரை எழுதினோர் பலர். மொழி மாற்றம் உலக மொழிகளிலும் செய்தனர். விவிலியம் உலகெங்கும் சென்ற டைந்தது போல், திருக்குறளும் உலக மொழிகளில் செல்லத் தலைப்பட்டது. ஒரு சிலர் குறளிலேயே கையும் வைத்துப் பார்த்தார்கள். வேறுசிலர் திருவள்ளுவரின் பிறப்பிலும் குலத்திலும் மூக்கை நுழைத் தார்கள். ஆனால் எதுவும் விலைபோக வில்லை. தமிழும் திருக்குறளும், அவற்றின் அடையாளத்தையும் தொன்மத்தையும் மறைக்க முடியவில்லை என்பது இன்று வரை நடைபெறும் நிகழ்ச்சியாகவுள்ளது.

கிருத்துவ மதத்தைப் பரப்பவந்த வெளிநாட்டார் தமிழிலே பாண்டித்தியம் பெற்றனர். தமிழைக் கற்றதோடு திருக் குறளை ஆங்கிலத்தில் செய்யுளிலும் உரைநடையிலுமாக மொழி பெயர்த்தனர். அப்போது விவிலியத்தின்நீதிமொழிகள்பகுதியிலுள்ள நன்னெறிகள் திருக்குறளு டன் ஒத்திருத்தல் கண்டு, திருவள்ளுவரைக் கிறித்தவராக்கினர். ஆங்கிலமறிந்த கிறித் தவப்பாதிரிமார் திருவள்ளுவரை கிறித்துவ மதத்தில் சேர்த்தனர். அதற்குக் காரணம் 13ஆம் நூற்றாண்டில் திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் என்னும் வைணவர் மநுதர்ம அடிப்படையில் செய்த காரியமாகும்.

சக்கரவர்த்தி நாயனார் என்பார் ஆங் கிலத்தில் மொழிபெயர்த்த போது, திருக் குறள் கருத்துக்கள் சமண இயக்கத்தின் நெறிமுறைகளோடு ஒத்திருத்தல் கண்டு, திருவள்ளுவர் சமண சமயத்தவர் என்று சொல்லச் செய்தார். இதற்கு ஆதாரமாக சமண முனிவர்கள் செய்த நாலடியாரின் அறம், பொருள், இன்பம் என்ற பகுப்பு முறைதான்.

அர்த்தமுள்ள இந்துமதம்? எழுதிய திரைப்படப் பாடலாசிரியர் கண்ணதாசன் திருவள்ளுவர் ஓர் இந்து என்று தெரிந்தோ தெரியாமலோ உளறிவிட்டார். இந்துமதமே அர்த்தமற்றது என்று அறிகிலாத கண்ண தாசன், திராவிட கழகத்தாரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத் தோடு தன்னை தொடர்புபடுத்திக்கொண்ட நாகசாமி என்பார் திருக்குறள் இந்து சாஸ் திரங்களின் தொகுப்பு என்று ஆங்கிலத்தில் எழுதத் தூண்டியது எது என்று தெரிய வில்லை. மயிலாப்பூரில் திருவள்ளுவ ருக்குக் கோயில்கட்டி பூசெய் (பூஜை) செய்கின்ற காரணத்தினாலா?

இந்த லட்சணத்தில், ‘இந்துத்வாவாதி கள் திருவள்ளுவர் சிலைக்கு களங்கம் கற்பிக்கவும் முற்பட்டனர். ஆர்.பி.வி.எஸ்.மணியன் என்பவரைக் கொண்டுதிருக் குறள் ஒரு வைதிக இந்து சமய நூல்என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதச்செய்து, வெளியீட்டு விழா வேறு நடத்தியுள்ளார்.

இப்படி எத்தனை காலந்தான் ஏமாற்று வார் இந்த நாட்டிலே?

காலந்தோறும் தமிழ் தன் அடை யாளத்தை எதிர்க்கத் தவறியதே இல்லை. நாமக்கல் கவிஞரின்திருவள்ளுவர் திடுக் கிடுவார்என்கிற நூலைப் படிக்காத தற்குறி களின் வேலை தொடர்கிறது. ‘திருக்குறளும் பரிமேலழகரும்எழுதிய நூலாசிரியர் புலவர் குழந்தையின் திறனாய்வை அறி வார்களா? நாவலர் நெடுஞ்செழியன் உரைக்கு சற்றொப்ப 40 பக்கங்கக்கு மேல் எழுதிய முன்னுரை அறிவார்களா? மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணரின்தமிழ் மரபுரையைக் கேள்விபட்டிருக்கவே மாட்டார்கள் போலும்!

யுனெஸ்கோ கூரியர்தமிழ்ப்பதிப்பின் ஆசிரியர் மணவை முஸ்தபா கூறுவார் : ‘என்றைக்கு ஒரு மொழிக்கு தெய்வத் தன்மை கூட்டுகின்றீர்களோ, அன்றைக்கு அதற்கு நீங்கள் சாவு மணி அடிக்கிறீர்கள்என்று. மொழிக்கு மட்டுமா அவர் சொன்னார்? ‘தெய்வப்புலவர்என்று திரு வள்ளுவருக்கு அடைமொழி கொடுத்ததை யும் சேர்த்துத்தான். இந்துத்துவாகாரர்கள் இந்துமதச்சாயம் பூசுவது உலக வழக்கு அழிந்து ஒழிந்த சமஸ்கிருதம் போல் தமி ழைச் செய்வதற்கான கால்கோள்தானே!

எந்த மதக்காரரும் என்னென்ன சாயத் தைப் பூசினாலும், சாயமெல்லாம் வெளுத்து விடும் என்பதை அறியார் போலும்!

Comments