பெண்களை அவமதிப்பதே ஆர்.எஸ்.எஸ். ராகுல் காந்தி சாடல்

புதுடில்லி, மார்ச். 26- மனிதாபி மானம் சிறிதும் இல்லாத ஆர் எஸ் எஸ் கூட்டத்தை இனி சங் பரிவார் எனக் கூறப் போவதில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தில் பெண்க ளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.   இம் மாநிலத்தில் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர்.   நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வன்முறையை தடுக்க உத்தரப் பிரதேச பாஜக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பலரின் கண்டனத் துக்குள்ளாகி இருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜான்சி ரயில் நிலையத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த இரு கன்னி யாஸ்திரீகள் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்த முயன்றனர்.  அவர் களையும் அவர்களுடன் வந்த இருவரையும் மதமாற்று காரர்கள் என குற்றம் சாட்டி ரயிலில் இருந்து இறக்கி விட்டனர்.

கன்னியாஸ்திரீகள் தாங் கள் ரயிலில் எவ்வித மதமாற்ற பணியிலும் ஈடுபடவில்லை எனத் தெரிவித்தும் அவர் களை மீண்டும் பயணம் செய்ய அனுமதிக்காதது கடும் சர்ச்சையை உண்டாக்கி உள் ளது.  இதற்குத் தக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கேரள முதல் வர் பின்ராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.  பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து தனது டிவிட்டரில், இனி நான் ஆர் எஸ் எஸ் என அழைக்கப்படும் ராஷ்டிரிய ஸ்வயம் சங் மற்றும் அதன் கூட்டமைப்பான எந்த ஒரு இந்து அமைப்பையும் சங் பரிவார் என நான் அழைக்க மாட்டேன்

பரிவார் என்பதற்கு குடும் பம் எனப் பொருளாகும்.  ஒவ் வொரு குடும்பத்திலும் பெண் கள் இருப்பார்கள்.  அந்தக் குடும்பத்தில் உள்ளோர் அவர்கள் மீது மரியாதையுடன் இருப்பார்கள்.    ஆனால் ஆர் எஸ் எஸ் மற்றும் அதைச் சார்ந்த அமைப்புக்களிடம் இது எதுவும் இல்லை. எனத் தெரிவித்துள்ளார்.

Comments