ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், கூட்டாட்சி, மதச்சார்பின்மை, பல கட்சி ஜனநாயகம் ஆகியவை முன்னுரிமை பெறும் என பத்திரிகையாளர் சிகா முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

·     அசாம் தேர்தலில் பா...வை தோற்கடிக்க அசாம் மாணவர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

·     நாடாளுமன்ற இரு அவைகளும்  குறிப்பிட்ட காலத்திற்கு 13 நாட்களுக்கு முன்பாகவே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

·     புதுச்சேரி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு தனது எதிர்ப்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     பொறியியல் படிப்பில் கணிதம், இயற்பியல் பாடங்கள் கட்டாயம் இல்லை என்ற மத்திய கல்வித் துறையின் முடிவு உலக அளவில் நமது நாட்டின் பொறியியல் படிப்பு மீது அவ நம்பிக்கையை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் எஸ்.எஸ்.மன்தா மற்றும் அசோக் தாகூர் தங்களது கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.

·     டில்லி அரசில் துணை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

·     .பி. ரயில் பயணத்தில் கிறித்துவ கன்னியாஸ்திரிகள் கட்டாயப்படுத்தி இறக்கிவிடப்பட்டதற்கு, ரயில்வே மற்றும் .பி. காவல்துறை பொறுப்பேற்க வேண்டும் என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

·     வரும் நாட்களில், பொருளாதாரத்தில் பின் தங்கியோர்க்கு மட்டுமே இட ஒதுக்கீடு இருக்கும் என மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் கருத்து தெரிவித்துள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     ராணுவத்தில் பெண்களை அதிகாரிகளாக நியமனம் செய்வதில் இன்னமும் ஆண் ஆதிக்கம் உள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

·     மேற்கு வங்கத்தில் அம்பான் புயல் தாக்கியபோது நாட்டின் காவலர் என தன்னை கூறிக்கொள்ளும் மோடி மாயமானார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா சாடியுள்ளார்.

தி டெலிகிராப்:

·     நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 80 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், ஓய்வு பெற்ற நீதிபதிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கலாம் என உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

- குடந்தை கருணா

26.3.2021

Comments