எந்த துணிச்சலில் வாக்கு கேட்கிறார்கள்?

மேக் இன் இந்தியா தோல்வி, டிஜிடல் இந்தியா தோல்வி, சுமார்ட் சிட்டி தோல்வி, பெண்கள் பாதுகாப்பு தோல்வி, ஸ்டாண்ட் அப் இந்தியா தோல்வி, ஸ்கில் இந்தியா தோல்வி, கருப்புப் பணம் மீட்டு வருவோம் என்ற வாக்குறுதியில் கடும் தோல்வி. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு முற்றிலும் தோல்வி, இப்படி 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் முதல் தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த அத்தனை திட்டங்களும் முற்றிலும் தோல்வியில் முடிந்துள்ளன. இதை அவர்களே புள்ளி

விவரங்களோடு மறைமுகமாக ஒப்புகொண்டனர். 

ரூ.40,000 கோடிக்கு மேல் கங்கை தூய்மை என்ற பெயரில் வசூலித்து இன்று வரை கங்கை ஆற்றின் 3 விழுக்காடு கூட தூய்மையாகவில்லை. மாறாக கங்கை மலையை விட்டு கீழிறங்கும் பகுதிகளிலேயே அசுத்தம் அதிகரித்துவிட்டதாக சமீபத்திய ஆய்வுகள் கூறியுள்ளன. காரணம் கங்கை பாய்ந்துவரும் மலைப்பகுதியில் அதிக அளவு மருந்துநிறுவனங்கள் துவங்கப்பட்டும் அந்த நிறுவனங்களின் கழிவு நீர் விதிமுறைகளை மீறி கங்கை ஆற்றில் கலப்பதால் கங்கை அசுத்தம் ஆகிவிட்டது என்று கூறியுள்ளனர்.

தூய்மை இந்தியா என்ற பெயரில் இன்று வரை பெரும் பணம் வசூலாகிக் கொண்டு - இருக்கிறது, ஆனால் உலகில் அதிகமான மாசடைந்த நகரங்கள் இந்தியாவில் தான் உள்ளன என்று சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. 

அப்படி என்றால் 7 ஆண்டுகளாக இவர்கள் ஆட்சியில் இருந்து என்ன செய்தார்கள்?

இவர்களை இங்கு காலூன்ற விடலாமா?

 தி.மு.க. கூட்டணியை  வெற்றி பெறச் செய்வீர்!

Comments