‘‘ஊசி மிளகாய்'' - ஆந்திராவில் நகராட்சி தேர்தலிலும் பா.ஜ.க. ‘‘கோவிந்தா! கோவிந்தா!!''

ஆந்திர மாநிலத்தில் நகராட்சிகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றுமுடிவுகள் வெளியாகியுள்ளன!

முன்பு, தெலங்கானாவில் அய்தராபாத் மாநகராட்சியைக் கைப்பற்றி பெயர் மாற்றுவோம் என்று உள்துறை அமைச்சரான அமித்ஷா உள்பட பலரும் தோள் தட்டியது - பிறகு தோல்வியிலே முடிந்தது!

அந்தத் தோல்விப் படலம், அதன் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் - நகராட்சி தேர்தலிலும் பா... பரிதாப சரிவுக்கே சென்றுள்ளது.

மோடி - பா... 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்குப் பின், இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடைபெற்ற தேர்தல்களில் தொடர் தோல்வியை - வாக்குச் சதவிகித சரிவையுமே சந்தித்து வருகிறது.

(குஜராத் ஒரே ஒரு விதிவிலக்கு; காரணம் வெளிப்படை - ‘வித்தைகள்' அங்கே செலாவணியாகின்றன).

என்.டி.. (N.D.A.) என்ற மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் பறந்தோடிவிட்டன! மிரட்டலுக்கு அஞ்சிய ஒரு சில மடிக்கனம் உள்ள மாநிலக் கட்சிகள் (.தி.மு.. போன்று)தான் உள்ளன - இங்கும் இதுபோன்ற சில மாநிலங்களிலும்!

எம்.எல்..,க்களை  ‘‘நல்ல விலை'' கொடுத்து வாங்கியே ஆட்சிக் கவிழ்ப்பினை, மத்தியப் பிரதேசம் தொடங்கி, புதுச்சேரி வரை செய்யும் ‘‘ஆயாராம் - காயாராம்'' வித்தைகளால் ஆட்சி காட்சியாக உள்ளது!

தேர்தல் என்பதை -  மக்களின் வாக்களிப்பைத் தீர்ப்பு எனக் கொண்டால், பா...வின் தோல்விப் படலம் தொடர்கதையாகவே வந்து கொண்டுள்ளது!

5 மாநிலத் தேர்தல்கள் சுவர் எழுத்தாக பா...வுக்கும் சோகத்தைத் தரும்! அதற்காகப் புதுச்சேரியை ஆறுதல் பரிசாகவாவது பெற முடியுமா என்ற ‘‘பகீரதப் பிரயத்தனம்'' செய்கிறது!

அங்கே எத்தனுக்கு எத்தனும் இருக்கிறார்கள் என்று காட்டும் ‘‘பொல்திக்'' அரசியல் போட்டியில் சில விநோதங்களும், விந்தையான வித்தைகளும்கூட நடைபெற்ற கடைசி நேர பல்டி திருவிழாக்களும் நிகழ்வதை எவராலும் தடுத்துவிட முடியாது!

இருக்கட்டும் பார்ப்போம்!

ஆந்திராவில் ஆளும் கட்சியான ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில்உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி (YSRCP) 

1. நகராட்சி தேர்தலில்  பெற்ற வாக்குகள் 52.63 சதவிகிதம்

2. தெலுங்கு தேசம் (TDP) 30.73 சதவிகிதம்.

3. பா... (BJP) 2.14 சதவிகிதம்.

(நோட்டாவுடன் போட்டி போடும் கட்சிதான் இது தென்னாட்டில்).

4. ஜனசேனா கட்சி 4.67 சதவிகிதம்.

அய்ந்து மாநில தேர்தல் முன்னோட்டம் இது.

மற்ற மாநில வித்தைகள் தெற்கே பலிக்காது!

ஒருபோதும் சூரியன் மேற்கே உதிக்காது!!

அங்கேயும் ‘‘திராவிடம்தான் வெல்லும்!'' புரிந்துகொள்வீர்!

Comments